இந்த ஜாதகம், தகுதி, தராதரம் பார்த்து 30 வயதை கடந்த பின்னரும் தமிழகத்தில் ஆண்களுக்கு கல்யாணம் நடப்பது குதிரை கொம்பாவே இருக்கு. கடைசியில் டைவர்ஸ் ஆன பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். எதுவுமே செய்ய முடியாமல் நெடிந்து போய் கிடக்கும் ஆண்களை குறி வைத்து, ஒரு கும்பல் ஏமாத்திட்டு வராங்க. ஒரு பொண்ணு இருக்கு. நீங்க எந்த நிலையில் இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுது. உங்களுக்கு ஓகேவான்னு பர்ஸ்ட் வலை வீசுவாங்க.
நேரில் அழைத்துச்சென்று ஒரு பெண்ணிடம் பேச வைப்பாங்க. அவங்க, "நான் ஒரு அனாதை, ஹாஸ்டலில் தங்கி இருக்கேன். எனக்கு சொந்த பந்தம் யாரும் இல்லை. நான் சொன்ன போதும், இந்த வாரமே கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று சொல்வாங்க. உடனே மாப்பிள்ளை குஷியாகி திருமண ஆசையில் மூழ்கி விடுவார். அந்த நேரம் பார்த்து புரோக்கர்கள் கமிஷன் தொகை பற்றி சொல்வாங்க. கல்யாணம் ஆனால் போதும் என்ற மனநிலையில் இருக்கும் ஆண்களுக்கு, அப்போது பணம் ஒரு பொருட்டாக தெரிவதில்லை. கடன் வாங்கியாவது கொடுத்து விடுகின்றனர்.
சில இடங்களில் 2 லட்சம் வரைக்கும் கரப்பாங்க. பணம் கைக்கு வந்து சேர்ந்ததும். இல்லாத பொல்லாத காரணம் சொல்லி எஸ்கேப் ஆயிருவாங்க. இதில் ஆச்சர்யமா, ஏற்கனவே திருமணமாகி, கல்யாண வயதில் இரண்டு பெண்கள் உள்ளதை மறைத்து, ஒரு பெண் இளம் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். அதுவும் ஒரு மாசம் குடும்பம் நடத்தி இருக்காங்க. வேண்டியதை சுருட்டிய உடனே அந்த பெண் எஸ்கேப் ஆயிருக்கு. பிடிச்சு விசாரிச்சா, அந்த மணப்பெண்ணுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்,ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டது. கொஞ்ச நாளில் பாட்டியாக போறாங்க.
பல மாவட்டங்களில் திருமண மோசடி செய்து உள்ளார். இதற்க்கு தனி திருமண புரோக்கர்கள் உள்ளார்கள், இந்த மோசடி பெண்ணிற்கு முதல் முறையாக பார்க்கும் நபர்களிடம் தான் ஒரு ஆனாதை என்றும் விடுதியில் தங்கி இருப்பதாக கூறி பல ஆண்டுகளாக திருமணம் நடைபெறமல் இருக்கும் கிராமத்து இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் முன் பணம் வேண்டும் என்றும் புரோக்கர் கமிசன் என்று கேட்டு முன்பே வாங்கி விடுவார்கள். பின்னர் 2 நாட்கள் கழித்து சென்று விடுவார் இவரை நண்கு விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்