notification 20
His & Her
ஏன் பெண்கள் மட்டும் துணி கடைக்கு போனால் அவ்வளோ லேட் பண்றாங்க தெரியுமா? கண்ணை மூடிக்கோங்க! ஆண்கள் "அந்த" விஷயத்தில் ரொம்ப வீக் பாடியாம்!

பசங்க ஒரு துணி கடைக்குப் போனால், ஒரு ஷர்ட், பேண்ட் எடுக்க அதிகபட்சம் 5 நிமிடம் ஆகும். அதுவே பெண்கள் துணிக்கடைக்குள் சென்றால், வெளியே வர குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். இந்த ஒரு காரணத்தை வைத்தே பெண்களை கிண்டலடிக்கும் போக்கு ஆண்கள் மத்தியில் ஊறிப்போய் கிடக்கு. உண்மையில் அவங்க ஏன் லேட் பண்றாங்க என்பதற்கு, உளவியல் ரீதியாகவும் சில காரணங்கள் இருக்கு. அதெல்லாம் ஆண்களுக்கு தெரிந்தால், மனசு விட்ருவாங்க பாவம்.

ஆண்களை விட பெண்களுக்கு கடவுள் அபிரிவிதமான சக்தியை கொடுத்துள்ளார். ஆமாங்க! ஒரு ஆணின் கண்ணிற்கு புலப்படும் வண்ணங்களை விட, பெண்ணின் கண்ணிற்கு பல மடங்கு அதிக வண்ணம் தெரியுமாம். எத்தனை வண்ணம் இருந்தாலும், அதனை முறையாக வேறுபடுத்தி சொல்லும் திறன் பெண்களுக்கு உண்டு. இன்னமுமே, சில ஆண்களிடம் இதென்ன நிறம் எனக்கேட்டால், உடனே சொல்ல திணறுவாங்க. அதுவே பெண்களிடம் கேட்டால், கிளி பச்சை, எலுமிச்சை மஞ்சள், சந்தன கலர் என ஏதாவது ஒரு அடையாளம் வைத்து, எந்த நிறமாக இருந்தாலும் வேறுபடுத்தி சொல்வாங்க.

நாம் காணும் அழகழகான வண்ணங்கள், நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்குகின்றது. இந்த திறன் பெண்களுக்கு சற்று அதிகமாக இருப்பதால், சாதாரணமான ஒரு துணி கூட, அவர்களின் கண்ணுக்கு பல கோணங்களில் வித்தியாசமாக தெரியும். துணிக்கடையில் எல்லா துணிகளையும் எடுத்துப்போட்டு, அதனை விரித்துக்காட்ட சொல்லி வேறுபடுத்தி பார்ப்பாங்க. ஆண்களை சேலை தேர்வு செய்யச் சொன்னால், அந்த பச்சை கலர் எடுங்க, சிவப்பு கலர் எடுங்கன்னு பொத்தம் பொதுவா ஐடியா கொடுப்பாங்க.

ஆனால் பெண்களின் கண்ணுக்கு பார்டர் என்ன கலரில் வருகிறது? ஜரிகை எப்படி நெய்யப்பட்டிருக்கிறது? உள்ளே வரும் டிசைன்களில் என்ன வித்தியாசம் தெரிகிறது? இந்த கலர் எந்த மாதிரியான இடங்களில் தூக்கலாக தெரியும்? எந்த இடங்களில் டல்லாக தெரியும்? என்பது முதற்கொண்டு யோசிப்பாங்க. குழந்தையில் இருந்தே நம் மூளை ஒவ்வொன்றையும் ஐம்புலன் கொண்டு கற்றுக்கொள்ளும் தெரிந்துகொள்ளும். ஆண்களின் சிந்தனை ஒரே நேர்கோடு என்றால், பெண்களின் மூளை பல கோணங்களில் யோசிக்க ஆரம்பிக்கும். இப்போது தெரிகிறதா ஏன் அவங்க இந்த அளவுக்கு லேட் பண்றாங்கன்னு?! 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts