notification 20
Misc
#Temple: கோயிலில் செய்யும் புளியோதரைக்கு ஏன் அவ்வளவு ருசி? பரம்பரை பரம்பரையாக கட்டிக்காக்கப்படும் இரகசியம்!

வீடு என்றால் பசி அடங்கும் அளவுக்கு சாப்பிடுவோம், இதுவே கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதமாக இருந்தால், சின்ன பாக்குமட்டை தட்டில் ஒரு துளி கொடுப்பாங்க. ஒரு வாய் சாப்பிட்டாலும், இன்னும் இன்னும் என்று மனசு கேட்கத்தூண்டும் அளவுக்கு சுவை இருக்கும். குறிப்பாக கோவிலில் கொடுக்கப்படும் புளியோதரையின் ருசி, வீட்டில் என்னதான் உருண்டு, புரண்டு முயன்றாலும் வருவதில்லை. இந்த மாதிரி பல உணவுகளில், அங்கலாய்த்துக்கொள்வோம். கடையில் வரும் ருசி வீட்டில் வருவது இல்லையே, அங்கு மட்டும் என்ன தான் சேர்க்கிறார்களோ என்ற சித்தனையாகவே இருக்கும்.

எல்லாம் செய்யும் முறையை பொறுத்ததே. அம்மிக்கல்லில் ஆட்டிய சட்டினிக்கும், மிக்ஸியில் அரைக்கப்பட்ட சட்டினிக்கும் வித்தியாசம் இருக்கு அல்லவா? அதே போலத்தான். அம்மியில் ஆட்டிய சட்டினி, கையால் ஒதுக்கி ஒதுக்கி விடப்பட்டு, மிதமான வேகத்தில் மைய அரைக்கப்படும். அதே மிக்ஸிசியில் போட்டு "ஷர்ர்ர்" என்று ஒரு ஓட்டு ஓட்டினால் உடனே அரைக்கப்பட்டு விடும். தொட்டுப்பார்த்தால் கொஞ்சம் சூடு தெரியும். அம்மியில் ஆட்டப்படும் சட்டினியில் இந்த சூடு வராது. இரண்டுக்கும் சுவை வித்தியாசம் உண்டு. இப்படித்தான் எல்லா வகையான உணவிலும் இடத்திற்கு இடம் சுவை வேறுபாடு நடக்கிறது.

அதில் கோவிலில் மட்டும் தனி ருசி வருகிறது என்றால், அதற்கென்று பிரத்யேகமாக மேற்கொள்ளப்படும் செய்முறை தான் காரணம். பொரும்பாலான பெருமாள் கோவில்களில், ஏதேனும் ஒரு பொருளை விலக்கி விட்டு சமைப்பார்கள். உதாரணத்திற்கு பார்த்தசாரதி கோயிலில், புளியோதரைக்கு சீரகம் சேர்க்காமல் சமைப்பார்கள். அதுவே ஒரு தனி ருசியை கொடுக்கும். இதே போல திருமலை திருப்பதி கோவிலில் கருவேப்பிலை இருக்காது. இதெல்லாம் தாண்டி சமையலில் எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கிறதோ, அந்த அளவுக்கு சுவை இருக்கும்.

கோவில் புளியோதரை/ ஐயங்கார் ...

ஈடுபாட்டுடன் சமைப்பவர்களுக்கு, இதற்கு இவ்வளவு தான் போட வேண்டும் என்ற அளவு எல்லாம் தேவையே இல்லை. "கண்ணளவு, கையளவு" தான், ருசியும் பிரமாதமாக இருக்கும். ஒரு சில கோவில் பிரசாதங்கள் அதீத சுவை வரக்காரணம், அதில் சேர்க்கப்படும் பொடிகளே காரணம். இதை பரம்பரை பரம்பரையாக பயன்படுத்துகின்றனர். அதுபோல, இறைவனுக்கு படைக்கப்பட்டு, இறைவனின் அருள் பெற்ற பிரசாதங்கள் மிகச்சிறந்த ருசியுடனும் சுவையுடனும் இருப்பது இயல்பானது. அப்படியான ஒரு மிகச் சிறந்த பிரசாதம் தான் உலகப் புகழ் பெற்ற திருப்பதி லட்டு.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts