HotPicks

நான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை தெரியுமா? கூட பழகுன பொண்ணு இப்படி ஒரு சத்தியம் வாங்கும்போது, யாருமே தயங்குவார்கள்!

Mar 05 2022 08:34:00 PM

மிப்பெரிய தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? இப்படி ஓடி ஓடி சம்பாதித்தாலும் கூட அதை ஆண்டு அனுபவிக்க வாரிசு  இல்லையே? இருப்பினும் இவரை வெற்றியாளராக உலகமே கொண்டாடுகிறது. ஒருவர் தொழில் ரீதியாகி வெற்றி பெற்றவராக இருந்து, சொந்த வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருப்பது முழு வெற்றியாளராக இருக்க ஏற்புடையதக்கதா? இவர் சரி என்றால், இவரை பின்பற்றுவோர் தொழிலுக்கு தானே முக்கியத்துவம் கொடுப்பார்கள்? குடும்பத்தை கண்டுகொள்ளாமல் போக வாய்ப்புண்டு தானே? இந்த கேள்விகளுக்கு இவரே பதில் கூறியுள்ளார். 

ratan-tata tata
அதாவது இவர் அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அங்குள்ள அமெரிக்க பெண்ணை உருகி உருகி காதலித்துள்ளார். அந்த பெண்ணிற்கும் இவர் மீது அதீத காதல். இருவரும் காதலிக்கும் போது, இவர் அந்த பெண்ணிற்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். இனி இந்த ஜென்மத்தில் உன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று. காதல் நன்றாக தான் போய் கொண்டிருந்துள்ளது, திடீரென ஒரு நாள் இந்தியாவில் இருந்து ரத்தன் டாட்டா அவர்களுக்கு ஒரு போன் வருகிறது. பாட்டிக்கு முடியாமல் உள்ளது விரைவில் இந்தியா வருமாறு கூறியுள்ளனர்.

ratan-tata tata

இவர் இந்தியா வருவதற்குள் பாட்டி இ றந்துவிட்டார். பின்னர் மீண்டும் அமெரிக்கா செல்லும்போது, அந்த பெண்ணிற்கு இன்னொருவருடன் திருமணம் நடந்துவிட்டது. இந்த பெண்ணிற்கு பிடிக்கவில்லை என்றாலும் பெற்றவர்களின் வற்புறுத்தலால் திருமணம் நடந்துவிட்டது. அந்த பெண்ணிற்கு செய்து கொடுத்த சத்தியம் தான், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் தடுத்தது என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

ratan-tata tata

அந்த பெண் உங்களை விட்டு சென்றும் கூட, ஏன் அந்த சத்தியத்தை காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தீர்கள்? என கேட்டதற்கு, அவர் கூறிய பதில் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. 'உண்மையாக நான் அந்த பெண்ணை நேசித்தேன். அவள் இடத்தில் யாரையும் நினைத்து பார்த்து முடியவில்லை. உண்மையாக நேசிக்கும்போது, அவர்கள் சொன்ன வார்த்தைகளை காப்பாற்ற வேண்டியதும் முக்கியம். அதனை உங்களால் தகர்த்து விட்டு செல்ல முடியாது' என கூறியுள்ளார்.

ratan-tata tata

ப்ராக்டிகலா(pratical) யோசி என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு, அன்பு, பாசம், காதல்,நேசத்தை உதறிவிட்டு செல்லும் இதே உலகத்தில் தான் ரத்தன் டாட்டா போன்றவர்களும் வாழ்கிறார்கள்.