notification 20
Misc
தர்பூசணி நல்லதா? முலாம்பழம் நல்லதா? 20 ரூபாய் பாக்கெட்டில் இருந்தால், என்னுடைய தேர்வு இதுவாகத்தான் இருக்கும்!

சீக்கிரம் உடல் எடை கூடி விட்டது. வெயிட் குறைந்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். சரியா அவங்க சொன்னது மார்ச் மாதம் என்பதால், தர்பூசணி சீசன். காலை இரண்டு தோசை சாப்பிட்டால், மதியம் அரை தர்பூசணி பழத்தை முழுவதுமாக சாப்பிட்டுவிடுவேன். அதாங்க மதிய உணவே. வேறு எதுவும் சாப்பிடவில்லை. பாதி பழம் சாப்பிட்டு முடித்த உடனே, முழு வயிறும் நிரம்பியது போன்ற உணர்வு வந்துவிடுவதால், அதற்கு மேல் பசியும் எடுப்பதில்லை. 

தர்பூசணியில் 92 சதவிகிதம் நீர் மட்டுமே உள்ளதால், உடல் எடையை எந்த விதத்திலும் கூட்டாது. ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறைந்துவிட்டது. தர்பூசணி சாப்பிட சாப்பிட இதய நலனைக் காக்கும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளாதல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறைந்த கலோரி மட்டுமே உள்ளதால், தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் எடை குறையும். தர்பூசணியில் வைட்டமின் பி 6 சத்து மிகுந்துள்ளது.

அந்த சத்து போதுமான அளவில் இருந்தால் மட்டுமே மனநிலை சீராக இருக்கும். மனஅழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்றவை தர்பூசணியை தொடர்ந்துச் சாப்பிட்டுவதால் குறையும். சீக்கிரம் மனநிலை அமைதியாகி நன்றாக இருக்கும். இரண்டு துண்டு தர்பூசணி சாப்பிடுவதால் இவ்வளோ நன்மை இருக்கு. அதே மாதிரி தான் முலாம்பழமும். முலாம் பழம் உடலின் உள்உறுப்புகளில் உண்டாகும் உஷ்ணத்தை குறைக்கிறது. முலாம் பழத்தின் விதையை மட்டும் தனியே எடுத்து, அதனை அரைத்து ஜூஸ் போட்டு குடித்தால் சிறுநீர் எரிச்சல் போய்விடும்.

வயிற்றில் உள்ள பூச்சிகளை சும்மா கல கலன்னு வெளியேற்றிவிடும்.குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது. மலிவான விலையில் சத்துக்கள் மிகுந்து காணப்படும் பழம் இது. சரி இப்போ மெயின் மேட்டருக்கு வருவோம். என்னிடம் 20 ரூபாய் கொடுத்து தர்பூசணி, முலாம்பழம் இந்த இரண்டில் எது வாங்குவன்னு கேட்டால், நான் தர்பூசணி பழத்தை தான் சொல்லுவேன். அதற்கு மேல் காசு இருந்தால், முலாம்பழ ஜூஸ் குடித்துவிட்டு வருவேன் . 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts