notification 20
Spellbound
விக்ரமன், செல்வமணி போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்கள் ஏன் இப்போதெல்லாம் வெளிவருவதில்லை?

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி இயக்குனர்களாக வளம் வந்தவர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே இந்த இயக்குனர்களின் இயக்கத்தில் எந்த படமும் வெளியாவதில்லை. எவ்வளவு பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர்கள் இப்போ ஒரு படம் கூட இயக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் என்னவா இருக்கும்.

இப்போ இருக்க இளம் இயக்குனர்கள் ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி படம் எடுக்குறாங்க. ரசிகர்கள் எல்லாவிதமான மொழிகளில் வெளியாகும் படங்களையும் பார்த்து ரசிக்கிறார்கள். லாஜிக் மிஸ்டேக் படத்தில் இருந்தா ரசிகர்கள் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒரே பாட்டில் பணக்காரன் ஆகுறமாதிரி படம் எடுத்தா ரசிகர்கள் கழுவி ஊற்றிவிடுவார்கள். லாஜிக் மிஸ்டேக் இல்லாம இவங்களால படம் எடுக்கறது ரொம்ப கஷ்டம். அதையும் மீறி இன்றைய காலத்திற்கு ஏற்ற மாதிரி படங்களை இவங்க எடுத்தாலும் அதை பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்த இயக்குனர்களை நம்பி பணம் போட்டு படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வருவதில்லை என்பது தான் உண்மை.

Share This Story

Written by

Karthick View All Posts