Out of Box

சத்தியமா சொல்றேன் இவர் காமெடியானே இல்லை! வயதானவர்கள் 100 பேரை தத்தெடுத்து இல்லம் நடத்தும் வெட்டுக்கிளி பாலா! அந்த மனசு தான் சார் கடவுள்!

Apr 21 2022 02:00:00 PM

விஜய் டீவியில் கலக்கப்போவது யாரு ஷோவில் இருந்து பாலாவை பார்த்து வருகிறேன். வெட்டுக்கிளி பாலான்னு கூட இப்போ தான் சொல்றாங்க. அவருடைய உண்மையான பெயர் பாலன் ஆகாஷ் என்பது, ஆரம்பத்தில் இருந்து ஷோ பார்க்கிறவாங்களுக்கு தெரியும். சரிங்க. எத்தனையோ பேர் இந்த மாதிரி காமெடி பண்றாங்க. பாலாவுக்கு மட்டும் ஏன் இந்த அளவுக்கு பில்டப் கொடுத்து சொல்றீங்கன்னு ஒரு சிலர் கேட்கலாம். பில்டப் மட்டுமல்ல, அவர் செய்யும் காரியத்துக்கு பாராட்டு விழா நடத்தினாலும் போதாது. 

bala vijay-tv vettukili-vijay

பாலாவுக்கு அதிகபட்சம் 27 வயசு தான் இருக்கும். 1995ல் பிறந்திருக்காரு. ஆனால் நிஜ வாழ்க்கையில் 50 வயதை கடந்தவர்கள் செய்ய முடியாத செயல்களை, இந்த சின்ன வயதில் செய்துகாட்டி அசத்தியிருக்கிறார். பாலாவுக்கு படிப்பு நல்லா வரும். நியாபாக சக்தி அதிகம். இப்போ ஒரு வார்த்தை சொல்லி அவரை நீங்க கிண்டல் பண்ணா, பதிலுக்கு 10 கவுண்டர் கிண்டல் உங்களை நோக்கி வரும். இந்த அபார திறமையாலே, விஜய் டீவி அடுத்தடுத்த ஷோவிற்கு உள்ளே எடுத்துக்கொண்டது. 

bala vijay-tv vettukili-vijay

முதலில் கலக்கப்போவது யாரு, பிறகு குக் வித் கோமாளின்னு முகம் காட்டி, இப்போ சினிமாவிலும் கால் பதித்துவிட்டாராம். குறுகிய காலத்தில் பெரிய நிலைக்கு சென்றுவிட்டாலும், சம்பாதித்த பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கவில்லை. வயதானவர்கள் 100 பேரை தத்தெடுத்து, அவர்களை கவனித்துக்கொள்ள கருணை இல்லம் நடத்தி வருகிறார். இவ்வளோ சின்ன வயசில், இந்த குணம் எல்லோருக்கும் வந்துவிடாது. பிறப்பிலேயே உதவும் குணம் உள்ளது. 

bala vijay-tv vettukili-vijay

இவ்வளோ நாள் ஒரு டீவி ஷோ காமெடியனா மட்டுமே பாலாவை பார்த்தேன். இந்த விவரம் எல்லாம் தெரிந்த பிறகு, சினிமா ஹீரோவை விட உச்சத்தில் வைத்து பார்க்கிறேன். எல்லோருமே இந்த மாதிரி சேவை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. ஒரு சிலர் இந்த மாதிரி முன்வந்து சேவை செய்தாலும், பல நூறு குடும்பங்கள் நிம்மதியாக தூங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வளோ செய்யும் பாலாவுக்கு, உங்களால் முடிந்த கைமாறு, அவரது சேவை பற்றி பிறருக்கு பகிர்வதே. எல்லோருக்கும் தெரியட்டுமே.