Spellbound

வாரத்துக்கு நாலு படம் ரிலீஸ் பண்ணுன மனுஷன் ஏன் இப்படி மாறிட்டாரு? விஜய் சேதுபதியின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் திரையுலகம்!

May 13 2022 03:04:00 PM

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் விஜய் சேதுபதி. ஒரு காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்குள் நுழைந்த விஜய் சேதுபதி தற்போது தன்னுடைய அபார நடிப்பு திறமையால் முன்னணி நடிகராக வளம் வருகிறார். மற்ற முன்னணி நடிகர்கள் எல்லாம் ஹீரோவை தவிர்த்து வேறு எந்த கதாப்பாத்திரத்திலும் நடிக்க மாட்டார்கள்.

vijay sethupathi stop-acting take rest

ஆனால் விஜய் சேதுபதி ஹீரோ மட்டுமல்லாமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி சினிமாவில் கூட தன்னுடைய கால் தடத்தை பதித்துவிட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வாரத்துக்கு ரெண்டு மூணு படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்த நடிகரும் விஜய் சேதுபதி தான். அந்த அளவுக்கு நிறைய படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார்.

vijay sethupathi stop-acting take rest

தற்போது விஜய் சேதுபதி கமலஹாசனுடன் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளீர், மாமனிதன், விடுதலை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து புதிதாக நடிப்பதற்காக எந்த படத்திலும் விஜய் சேதுபதி கமிட் ஆகவில்லை. கதை சொல்ல யாரவது இயக்குனர்கள் வந்தால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறார்.

vijay sethupathi stop-acting take rest

ஏன் விஜய் சேதுபதிக்குள் இப்படி திடீர் மாற்றம் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து விஜய் சேதுபதியின் நெருங்கிய வட்டாரத்தில் கேட்டுள்ளனர்.சினிமாவுக்கு வந்ததுல இருந்து இப்போ வரைக்கும் நடிச்சுக்கிட்டே இருக்காரு, கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காம அலைஞ்சு திருஞ்சுகிட்டு இருக்காரு, அவருக்கு இப்போ கொஞ்சம் ஓய்வு தேவை. அந்த ஓய்வை முடிச்சுட்டு மீண்டும் பழைய மாதிரி நடிக்க வந்துடுவார் என்று விஜய் சேதுபதியின் நெருங்கிய வட்டாரங்களில் பதிலளித்துள்ளனர்.

vijay sethupathi stop-acting take rest