notification 20
Spellbound
இது தான் என்னோட கடைசிப்படம்! ரசிகர்களின் மனதில் குண்டை தூக்கிப்போட்ட உதயநிதி ஸ்டாலின்!

மக்கள் மத்தியில் பிரபலம் ஆகணும்னா அதுக்கு ஒரே வழி மீடியா மட்டும் தான். ரெண்டு படத்தில் நடித்துவிட்டால் மக்கள் அந்த ஹீரோவை எப்பவும் மறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஆரம்பம் முதல் தற்போது வரை அரசியலில் சினிமா பிரபலங்கள் வெற்றி பெற்றதற்கு ஒரே காரணம் இந்த சினிமா துறை மட்டும் தான். எம்.ஜி.ஆரில் தொடங்கி தற்போது அரசியலுக்கு வர துடிக்கும் நடிகர்கள் வரை எல்லோரும் சினிமாவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி நடிகர்களாக அறிமுகமாகி அரசியலில் இறங்கி விடுகிறார்கள்.

நம் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி யாரென்றே சில வருடங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் எல்லோரும் தெரிந்துகொள்ளும்படி அவருடைய முகம் பிரபலமானது. அதன் பிறகு மனிதன் என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருகிறார்.

சினிமாவில் ஹீரோவாக நடித்ததன் மூலமாகத்தான் உதயநிதி மக்களிடையே பிரபலமாகி அரசியலில் வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏவாக வளம் வருகிறார். இவர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்த ரெண்டு படங்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மாமன்னன் படத்தில் நடித்து முடித்தவுடன் இனி தான் ஹீரோவாக சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், அரசியலில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது, அதனால் தற்போது கொஞ்ச காலத்துக்கு சினிமாவில் மாமன்னன் படத்திற்கு பிறகு தலை காட்ட மாட்டேன் என்றும் உதயநிதி அண்மையில் பேட்டி ஒன்றில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Share This Story

Written by

Karthick View All Posts