தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராகவும், எம்.எல்.ஏவாகவும் பதவி வகிக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் சார்பாக படங்களை தயாரித்தும் வருகிறார். அண்மைக்காலங்களாக வெளியாகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை இந்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி திரையரங்குகளில் வெளியிட்டு வருகிறது.
சமீபகாலமாக வெளியான முன்னணி நடிகர்களின் படங்களான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து நேரடியாக இந்த படங்கள் என்ன மாதிரியான பிசினஸ் செய்தது என்று உதயநிதியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அண்ணாத்த படம் ஹிட் என்றும், பீஸ்ட் படம் வியாபார ரீதியாக மிகப்பெரிய ஹிட் என்றும், காத்து வாக்குல ரெண்டு காதல் படம் மிகப்பெரிய ஹிட் என்றும் தெரிவித்தார். இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தவை. பீஸ்ட் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தது என்றாலும் எங்களுக்கு இந்த ரெண்டு படமும் நல்ல லாபத்தை கொடுத்தது என்று சொன்னார். காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விஜய் சேதுபதி சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது என்றும், சமீபத்தில் நாங்கள் வெளியிட்ட ராதே ஷ்யாம் படம் மட்டும் தான் எங்களுக்கு தோல்வி படமாக அமைந்தது என்று தெரிவித்தார்.