காலங்களின் வளர்ச்சியில் அனைத்து துறைகளும் முன்னேறி வருகின்றன. போக்குவரத்து துறையும் வேகமாகவே வளர்ந்து வருகிறது. அந்த காலங்களில் இருப்பது போன்ற போக்குவரத்து முறை தற்போது இல்லை. நினைத்த இடத்திற்கு நினைத்த வேகத்தில் செல்வதற்கு பல்வேறு வசதிகளும் உள்ளன.
நாம் செல்லும் பயணங்களில் சிரமம் ஏதுமின்றி சுலபமாக சென்று வருவதற்கு கால் டாக்சிகளை புக் செய்து சென்று வருகிறோம். சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் கூட சில சமயங்களில் இதுபோன்ற கால் டாக்சிகளை பயன்படுத்தி வெளியில் சென்று வருகின்றனர். ஒலா, யூபர் போன்ற பல்வேறு தனியார் கால்டாக்ஸி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் யூபர் டாக்ஸி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் உண்மையை பேசிய செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு கரிஷ்மா என்ற பெண் ஒருவர் யூபர் மூலம் டாக்ஸி புக் செய்துள்ளார். புக் செய்த பின்னர் அந்த டிரைவருக்கு அவர் இருக்கும் இடம் பற்றியும், எப்பொழுது வந்து பிக்கப் செய்து கொள்வீர்கள் என்பது பற்றியும் கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அந்த மெசேஜை பார்த்த டிரைவர் தற்பொழுது தான் பரோட்டா சாப்பிட்டு கொண்டிருப்பதாகவும் அதில் பாதி பரோட்டா இன்னும் மிச்சமிருக்கிறது. எனவே அதை சாப்பிட்ட உடன் நிச்சயம் வந்து சீக்கிரம் பிக்கப் செய்து கொள்கிறேன் என பதிலளித்துள்ளார். உண்மையை சொன்ன அந்த டிரைவரின் மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அந்தப் பெண் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த ஓட்டுநரின் நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டுநர் இந்த அளவிற்கு உங்களிடம் நேர்மையாக பதில் அளித்த காரணத்திற்காகவே நீங்கள் அவருக்கு எக்ஸ்ட்ரா டிப்ஸ் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.