Spellbound

தமிழில் ரீமேக் பண்றேன்னு சொல்லி, காட்டு சொதப்பு சொதப்பப்பட்ட 5 மலையாளப்படங்கள்! இதுக்கு பருத்தி மூட்ட, குடோன்லயே இருந்திருக்கலாமே வாத்தியாரே!

Nov 08 2021 02:14:00 PM

ஒவ்வொரு மொழி ரசிகருக்கும் வெவ்வேறு ரசனை உண்டு. மலையாளத்தில் ஒரு படம் வெற்றி பெறுகிறது எனில், அது சிறந்த படம் என்று அர்த்தம் அல்ல. மலையாள ரசிகர்களுக்கு அது பிடிச்சிருக்கு அவ்வளவுதான். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற புலி முருகன் படம், தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதை பார்த்த போது, சுமார் படமாகத்தான் தெரிந்தது. ஆனால் கேரளாவில் மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இரசனை சார்ந்தது. அங்கே வெற்றி பெற்ற உடனே, மலையாளப் படத்தை தமிழில் எடுக்கிறோம் என, வேறொரு சம்பந்தம் இல்லாத மொக்கை படத்தை எடுத்து தள்ளிவிடுகின்றனர். அந்த வகையில் தமிழ் ரீ-மேக் பண்றேன்னு சொல்லி, சொதப்பி வைக்கப்பட்ட ஒரு சில காவியங்களின் தொகுப்பை அடுத்து பார்க்கலாம்.

1. Bangalore days

malayalam tamil-remake papanasam

malayalam tamil-remake papanasam

தமிழில் ஓவர் ஆக்டிங் படமாக அமைந்துவிட்டது. ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா எவருமே அவரது நடிப்பை ஒழுங்காக செய்யவில்லை. மலையாளத்தில் கல்யாண வீட்டுக்கு துல்கர் நடந்து வருவது போல இருந்தது இயல்பாக இருக்கும். ஆனால் தமிழில் ஆர்யா KTM RC பைக்கில் வருவது ஏதோ செயற்கையாக இருந்தது. என்னைக்கேட்டால், மலையாளத்தில் இருந்து வெறுமனே, டப் செய்து வெளியிட்டிருக்கலாம்.

2. நிமிர்

malayalam tamil-remake papanasam

malayalam tamil-remake papanasam

"மகேஷின்டே பிரதிகாரம்" என்ற படம் "நிமிர்" என்று எடுத்து ரொம்ப கெடுத்து இருப்பார்கள். மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பு அபாரமாக இருக்கும். தமிழில் உதயநிதி படத்தை மொத்தமாக கெடுத்துவிட்டார்.

3. பாபநாசம்

malayalam tamil-remake papanasam

malayalam tamil-remake papanasam

த்ரிஷ்யம் என்ற மலையுடன் ஒப்பிடும்போது பாபநாசம் சின்ன மேடு மாதிரி. மலையாளத்தில் மோகன்லால் தத்ரூபமாக நடித்திருப்பார். கமல் மிகச்சிறந்த நடிகர் என்றாலும், ஒரிஜினலோடு ஒப்பிடும் போது சரியாக மெனக்கிடவில்லையோ எனத்தோன்றுகிறது.

4. பாறை

malayalam tamil-remake papanasam

malayalam tamil-remake papanasam

மலையாளத்தில் "மாகாயானம்" என்று மம்முட்டி நடித்த படத்தை, பாறை என்ற பெயரில் தமிழில் ரொம்பவும் சொதப்பி விட்ருப்பாங்க. எனக்கு படம் ஓடியதே நியாபகத்தில் இல்லை.

5. மாறா

malayalam tamil-remake papanasam

malayalam tamil-remake papanasam

மலையாளத்தில் Charlie என்ற பெயரில் வெளியான படத்தை, தமிழில் மாதவன் நடிப்பில் "மாறா" என ரீமேக் செய்தனர். படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும், மலையாளத்தில் இருந்த வைப்ரேஷன் இதில் சுத்தமாக இல்லை. "யார் அழைப்பது" பாடலுக்காகவே ஒருமுறை பார்த்தேன்.

இவையெல்லாம் சொதப்பிவிட்டதோன்னு எனக்கு ஃபீல் ஆன படங்கள். இது போக வேறு ஏதாவது இருக்கா? உங்கள் இரசனை எப்படி இருக்குன்னு பார்ப்போமே.