Daily News

ஐபிஎல் மோகத்தை விட்டு வெளிய வந்து பாருங்க! கிரிக்கெட்டை தாண்டியும் சாதிக்க பல வழிகள் இருக்குது! வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ள இளம் சிங்கங்கள்!

May 16 2022 10:54:00 AM

வருடத்தில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஐபிஎல் போட்டிகள், 3 மாதங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி, போதாக்குறைக்கு மெகா சீரியல், சண்டே ஆனால் தியேட்டரில் ஏதாவது ஒரு படம் என நம்முடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இப்படி இயந்திரம் போல நகர்ந்து கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையை கொஞ்சம் வேற மாறி மாற்றிப்பார்க்கலாமா?

thomas-cup badminton-victory indian-team

கிரிக்கெட்டை தவிர வேறு எந்த விளையாட்டும் நம் ஊரில் இல்லையா என்ன? புட்பால், வாலிபால், தேசிய விளையாட்டு ஹாக்கி என்று ஏகப்பட்ட விளையாட்டுகள் இருந்தாலும் பலருக்கும் இந்த கிரிக்கெட் மீது மட்டுமே ஆர்வம் வருகிறது. கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளிலும் நம்மால் இறங்கி அடிக்க முடியும் என்பதை நம்முடைய இந்திய பேட்மின்டன் குழுவினர் தற்போது நிரூபித்து காட்டியுள்ளனர்.

thomas-cup badminton-victory indian-team

75 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக பேட்மின்டன் விளையாட்டில் தாமஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது இந்தியா. இந்த வெற்றி ஒன்றும் சாதாரணமானது இல்லிங்க. பைனலில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது இந்தியா. இந்த தொடரில் படிப்படியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய பிறகு தான் இந்த போட்டிகள் குறித்த செய்திகள் கவனம் ஈர்த்தன.

thomas-cup badminton-victory indian-team

இந்த பேட்மின்டன் அணியில் இருக்கும் பலரும் இளம் வீரர்கள் ஆவர். இவர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போட்டியில் கண்டிப்பாக பதக்க வேட்டை நடத்தலாம். கிரிக்கெட் விளையாட்டை மட்டும் விளையாட வேண்டும் என்ற நெருக்கடி யாருக்குமே இல்லை. கிரிக்கெட்டில் சச்சின், தோனி மாதிரி ஆக வேண்டும் என்று கனவு காணலாம். ஆனால் எல்லோருமே கிரிக்கெட்டில் நுழைந்து சாதிப்பது கடினம்.

thomas-cup badminton-victory indian-team

கிரிக்கெட்டை தாண்டியும் நிறைய விளையாட்டுகள் இருக்கிறது. பேமஸ் ஆன விளையாட்டாக இல்லையென்றாலும் பரவாயில்லை, உங்களுக்கு ஆர்வம் இருந்தால் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் நாம் சாதிக்க முடியும். ஒலிம்பிக்கில் இருக்கும் பாதி விளையாட்டு என்னவென்றே நமக்கு தெரியாது. அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் எப்படி பதக்க வேட்டை நடத்த முடியும்? எனவே கிரிக்கெட் விளையாடுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் மற்ற விளையாட்டுகளையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு மற்ற விளையாட்டுகளிலும் ஈடுபாட்டை வரவழைப்பதில் பெற்றோர் பங்கும் முக்கியமானது.