HotPicks

காளியின் மைந்தர்களை தண்டித்தால் ஆட்சி பறிபோய்விடும்! தக்கர்களுக்கு பயந்து நடுங்கிய இந்திய மன்னர்கள்! தக்கர்கள் என்னும் கொள்ளை கூட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?

May 09 2022 04:51:00 PM

வரலாற்றில் நமக்கு தெரியாத எத்தனையோ உண்மைகள் மறைந்து கிடைக்கின்றன. வரலாற்றின் இருண்ட பக்கத்தில் எவ்வளவோ அட்டூழியங்கள் நம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக நம் இந்தியாவை அஞ்சி நடுங்க வைத்த தக்கர்கள் என்னும் கொள்ளைக்கூட்டம் இப்போது இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டது.

thakkarkal group end life

ஆங்கிலேயர்களும், வெளிநாட்டு முகலாயர்களும் நம் இந்தியாவிற்கு வருகை தருவதற்கு முன்னர் மன்னர்கள் நம் இந்தியாவை ஆட்சி செய்து வந்தனர். அந்த காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதிகளை தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். காவல்துறையை சேர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள், ஆன்மீக யாத்திரை மேற்கொள்பவர்கள், அரசு அதிகாரிகள், பயணங்கள் மேற்கொள்பவர்கள் என தயவு தாட்சனை பார்க்காமல் எல்லோரையும் இந்த தக்கர்கள் கொன்று குவித்தனர்.

thakkarkal group end life

சுருக்கு கயிற்றை தூக்கி வீசி கழுத்தை நெரித்து கொள்வது தான் இவர்கள் கொலை செய்ய பயன்படுத்தும் யுக்தி. இறந்தவர்களின் உடைமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் பிணங்கள் கூட கிடைக்காத அளவிற்கு கொலை செய்வது தான் இவர்கள் வழக்கம். காளியின் பெயரை சொல்லி காளிக்காகத்தான் இதை எல்லாம் செய்வதாக தக்கர்கள் சொல்லி வந்தனர். காளியின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோமே என்று பயந்து நிறைய இந்திய மன்னர்கள் இந்த தக்கர்களை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

thakkarkal group end life

வில்லியம் ஸ்லீமென் என்ற பிரிட்டிஷ் அதிகாரி இந்தியாவிற்கு வந்த பிறகு தான் நிலைமை மாறத்தொடங்கியது. தக்கர்கள் எந்த நேரத்தில் எப்படி மனிதர்களை தாக்குகிறார்கள், எந்த மாதிரியான யுக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக தக்கர்களை அழிக்க தொடங்கினார் வில்லியம் ஸ்லீமென். பின்னர் சில வருடங்களிலேயே தக்கர்கள் என்ற கொள்ளைக் கூட்டம் இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது என்று வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

thakkarkal group end life