notification 20
HotPicks
நடக்கக்கூடாததெல்லாம் நடக்கப்போகுது! உள்ளூர் சாப்பாட்டு கடைகளை முடித்துக்கட்டப் போகும் ஸ்விக்கி, ஜொமாட்டோ! நேரடியா கொடுக்கப்பட்ட மிரட்டல்?

ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்களின் ஆட்டம் எல்லை மீறிப்போய் விட்டது. ஒருத்தன் எல்லை மீறி நம்மை நெருங்கி வருகிறான் என்றாலே, நம்முடைய அசைவுகள் முதற்கொண்டு, மொத்த ஜாதகமும் அவன் கைக்கு போகிறது என்று அர்த்தம். இப்போ உங்க மொபைல் நெம்பரை போட்டு தேடினால் எந்த நேரத்தில் என்ன சாப்பிடுவீங்க. எந்த நாட்களில் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பது முதற்கொண்டு எல்லா தகவலும் அவங்களுக்கு தெரியும். அதற்கேற்ப ஆபர்களை அள்ளி வீசி, உங்களை மீண்டும் மீண்டும் ஆர்டர் பண்ண வைப்பாங்க. 

ஆரம்பத்தில் கஷ்டமர்களை பிடித்து விடுகின்றனர் என்பதற்காக ஹோட்டல்கள் ஸ்விக்கி, ஜொமாட்டோவுடன் இணைந்து கொண்டன. ஆர்டர் பிடித்து தருவது போல வந்து, இன்னைக்கு ஒரு ஊரில் உள்ள மக்களின், தனிப்பட்ட விவரங்கள் மொத்தமா சேகரிச்சு வெச்சிட்டாங்க. நம்ம அட்ரெஸ், மேப் லோக்கேஷன், மொபைல் நெம்பர், பேங்க் அக்கவுண்ட் விவரம் எல்லாமே அவங்ககிட்ட இருக்கு. அதைனை தாண்டி, என்ன சாப்பிடுவோம்? என்ன குடிப்போம்? எவ்வளோ செலவு செய்ய தகுதி இருக்குன்னு முதற்கொண்டு தெரியும். 

இதனை எல்லாம் வைத்துக்கொண்டு, ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்கள் ஹோட்டல்களை மிரட்டுகின்றன. அவங்க சொல்ற நாட்களில் ஆபர் கொடுக்க வேண்டும். அதற்கு சம்மதிக்க மறுத்தால், ஹோட்டல் பெயரை நீக்கி விடுவதாகவும் மிரட்டி இருக்காங்க. ஒரு ஊரில் குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு அதிக டிமாண்ட் இருந்தால், ஸ்விக்கி, ஜொமாட்டோ தரப்பிலேயே ஒரு உணவகம் தொடங்கப்பட்டு 10 நிமிடத்தில் டெலிவரி பண்றாங்க. இதெல்லாம் நம்ப வைத்து கழுத்தறுக்கின்ற வேலை. 

நம்முடைய நிலத்தில் கட்டப்பட்ட கடையை வாடகைக்குவிட்டு, அங்கே நல்லா வியாபாரம் ஆவது தெரிந்தவுடன், வாடகைக்கு வைத்தவரை காலி பண்ண சொல்லிட்டு, நாமே அங்கு ஒரு கடை வைத்தால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி ஈனத்தனமான வேலை இது. அதையும் வெக்கம் இல்லாம செய்யிறாங்க. ஆயிரம் தான் சொல்லுங்க. எதெல்லாம் நம்மை சோம்பேறியாக்க புதுசு புதுசா அறிமுகப்படுத்துறாங்களோ அதெல்லாம் ஒரு காலத்தில் நமக்கு கண்டிப்பா ஆப்பு வைக்கும். 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts