Daily News

விட்டா மேடத்த அடுத்த PM ஆக்கிடுவாங்க போல! சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வரும் தானைத்தலைவியின் ரசிகர்கள்!

May 16 2022 07:23:00 PM

சன்னி லியோன் ஆ பாச படங்கள் மூலம் பிரபலமானவர் என்றாலும் தற்போது அவர் செய்து வரும் பல்வேறு சமூக சேவைகள் அவருடைய புகழை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழ் மற்றும் ஹிந்தியில் பல்வேறு படங்களில் படு பிஸியாக நடித்து வரும் சன்னி லியோனுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆனால் இவருடைய பிறந்தநாளை ஒரு ஊர்மக்கள் திருவிழா போல கொண்டாடியுள்ள விஷயம் இப்போது தான் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

sunny-leone birthday-celebration karnataka-people

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்பகுதியில் சன்னி லியோன் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடியுள்ளனர். திருவிழா போல நடந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல நல்ல விஷயங்களும் நடைபெற்றுள்ளது. ஊருக்கு நடுவே பெரியதாக சன்னி லியோன் கட் அவுட் வைக்கப்பட்டு அவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. வெறும் சாக்லேட், கேக்கோடு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நின்றுவிடவில்லை.

sunny-leone birthday-celebration karnataka-people

பொழுது போகாமல் நாங்க பிறந்தநாள் கொண்டாடவில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் அந்த கிராமத்து இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி ர த்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு கிராமத்தில் இருக்கும் பலரும் முன்வந்து ர த்ததானம் செய்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

sunny-leone birthday-celebration karnataka-people

இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி சன்னி லியோனின் காதுகளுக்கும் சென்றுள்ளது. தன்னுடைய பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடி ர த்ததான முகாம் நடத்தி சமூக சேவை செய்துள்ள ரசிகர்களுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தானும் ர த்ததானம் செய்வதாக வாக்களித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

சன்னி லியோனுக்காக இந்த அளவுக்கு இறங்கி செய்வதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கின்றனரா என்று சினிமா நடிகைகள் பலரும் பொறாமைப்படும் அளவுக்கு சிறப்பான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர் அவரது ரசிகர்கள். சாதாரண பிறந்தநாள் கொண்டாட்டமாக இல்லாமல் அதை சமூக சேவையாக மாற்றியுள்ள சன்னி லியோன் ரசிகர்களுக்கு சல்யூட் அடிப்பதில் எந்த தவறும் இல்லை. சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு உங்க ஊரில் இப்படி ஏதாவது சூப்பர் சம்பவம் அடைந்திருந்தால் தவறாமல் அதைப்பற்றி இங்கே குறிப்பிடுங்கள்.