தமிழகத்தில் கோடைகாலத்தில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களை வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக ஆங்காங்கே சில புது வித தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் தாகத்தை தணிக்கும் இந்த தொழில்கள் ஒரு சிறு விஷயமாக பார்க்கப்பட்டாலும் அதன் பின்னணியில் இருக்கும் வியாபார யுக்தி மிகவும் வியக்க வைக்கும்.
ஆம் இந்த கோடை காலத்தில் முளைக்கும் பல்வேறு தொழில்களும் எங்கு ஆரம்பிக்கிறது? கோடை காலத்துக்கு பின்னர் அந்த இடத்தில அந்த தொழில்கள் நடப்பது இல்லையே! அது ஏன்? என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? தற்போது கோடையில் வளம்வரும் முக்கிய தொழில்களில் சாலையோரத்தில் தான் நடக்கிறது என்பதை கவனித்து இருப்பீர்கள். இவர்களின் எளிமை தான் இவர்களின் விற்பனை ரகசியம்.
* சாலையோர கம்பக்கூழ் கடையை எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கான முதலீடு வெறும் 3000 ரூபாய் மட்டும் தானாம். மேலும் ஒருநாளைக்கு சரியாக வியாபாரம் போனால் இதன் மூலம் 5000 ரூபாய் லாபம் கிடைக்கிறதாம்.
* சாலையோரத்தில் இருக்கும் தர்பூசணி விற்பனை. இந்த செட்டப்பை ஏற்படுத்த வெறும் 2000 ரூபாய் இருந்தால் போதுமானது. ஒரு பழத்தில் மட்டுமே உங்களுக்கு 50 ரூபாய் வரையில் லாபம் கிடைக்கும் என்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 10 பழம் விற்பனையாகிறது என்று வைத்துக்கொண்டால் கூட தினமும் இதில் 500 ரூபாய் வரையில் லாபம் கிடைக்கும்
* சாலையோர இளநீர் கடைக்கு ஒரு சைக்கிள் இருந்தால் போதுமானது. சரியான இடத்தில இருந்து இளநீரை இறக்கி விற்பனை செய்யும்போது ஒரு இளநீருக்கு 5 முதல் 10 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது என்கிறார்கள் குத்தகைதாரர்கள்
* சாலையோர நுங்கு கடைக்கு சைக்கிள் கூட தேவையில்லை. சரியாக இறக்கிய நுங்கை பரப்பி வைக்க ஒரு பெரிய கோணிப்பை மற்றும் அதனை நிரப்பிவைக்க தட்டு. இவ்வளவு தான் இதற்கு தேவை. இதனை சரியாக செய்தல் இதிலும் ஒருநாளைக்கு 300-500 வரை லாபம் காணலாம்.
* வெள்ளரிக்காய் விற்பனை இந்த அனைத்து தொழில்களைவிடவும் இன்னும் சுலபனமது. பேருந்துகளுக்கு அருகில் வந்து வெள்ளரிக்காய் விற்பவர்களை பார்த்து இருப்பீர்கள். அவர்கள் நன்கு சுத்தப்படுத்தி, கீத்து போட்டு அந்த காய்களை சுவையாக கொடுக்கிறார்கள். 3 தொகுப்புகள் அடங்கிய பையின் விலை 20 ரூபாயாக இருக்கிறது. இதில் பைக்கு குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறதாம்.
இப்படி கோடைகாலத்து சிறு தொழில்கள் மிகவும் மும்மரமாக நடந்துகொண்டு இருக்கிறது. பார்ப்பதற்கு இது வெறும் சிறு தொழில்களாக தென்படலாம். ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் மார்க்கெட் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு வாடகை பிரச்சனை கிடையாது.
எங்கு வேண்டுமானாலும் தொழில் செய்ய வாய்ப்புகள் உள்ளது. தினமும் ஒரு இடத்துக்கு சென்று அவர்களால் வியாபாரம் செய்ய இயலும். இதனால் தான் கோடையில் ஒரு இடத்தில இருக்கும் அவர்கள் அந்த சீசன் முடிந்ததும் வேறு இடத்துக்கு மாறி விடுகிறார்கள் . எந்த தொழில் செய்கிறோம்? என்பதை விட அதனை எப்படி திறமையாக செய்கிறோம்? என்பது தான் மிகவும் முக்கியம்.