notification 20
His & Her
ஒரு மண்டலம் இதனை பயன்படுத்தினால், முடி கரடி குட்டி போல வந்துவிடும்! முடி நன்றாக வளர்ந்ததும் இதன் பயன்பாட்டை நிறுத்தி கொள்ளுங்கள்!

பொடுகு தொல்லையால் முடி உதிர்கிறது, உ டல் வெப்பத்தால் முடி உதிர்கிறது, வயது முதிர்வால் முடி உதிர்கிறது என எந்த வித முடி உதிர்விற்கும் ஒரே தீர்வு சணப்பை விதை. இந்த விதையை சரியாக பயன்படுத்தினால் போதும். இரண்டே வாரத்தில் மாற்றம் தென்படும். வாரம் இருமுறை இந்த செய்முறையை பின்பற்றினால் போதும். முடியாத நிலையில் வாரம் ஒருமுறை பின்பற்றினாலே போதும். குட்டி குட்டி முடிகள் ஆங்காங்கு வளர்ந்திருக்கும்.  

இந்த செய்முறையை செய்ய சரியான நாள் விடுமுறை நாள் மட்டுமே. ஏனெனில் இதற்கு வேலையும் கவனமும் அதிகம் தேவைப்படும். உடனடியாக பலன் கொடுக்க கூடிய செய்முறைகள் எல்லாமே கொஞ்சம் நேரம் பிடிக்கத்தான் செய்யும். சோயா பீன்ஸ் அல்லது சோயா விதை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முழுக்க முழுக்க புரதசத்து நிறைந்த ஒன்று. இதனை இரவே ஊறவைத்து விடுங்கள். நன்றாக ஊறவேண்டும் இரவில் ஊற வைக்கும்போது, ஒரு ராத்திரி முழுக்க ஊறி இருக்கும். இதனை காலையில் நன்றாக அரைத்து, தலையில் ஒரு மணிநேரம் ஹேர் மாஸ்க் போல போட்டு கொள்ளுங்கள். போட்டு கொண்டால் மட்டும் போதாது. முடிகளுக்கு கொஞ்சம் மசாஜ் அவசியம். ஒரு மணிநேரம் முதல் ஒன்றரை மணிநேரம் ஊறினால் போதும். தலையில் ஹேர் மாஸ்க் போட்டுவிட்டு நீங்க பாட்டுக்கு உங்க வேலையை தொடரலாம். 

அடுத்து இது நன்றாக காய்ந்த பின்னர், முடிகளை வழக்கம் போல எந்த ஷாம்பு போட்டு வாஷ் செய்வீர்களோ அதனை கொண்டு அலசி விடுங்கள். தலைமுடி பட்டு போல காய்ந்தவுடன், அடுத்து கூற உள்ள எண்ணெய்யை தலையில் மசாஜ் செய்து தேய்த்துவிட வேண்டும்.  

அந்த எண்ணெய் செய்முறை, சணப்பை விதை எனும் ஆலிவ் விதையை(flex seed) நன்றாக பொடியாக்கி வைத்து கொள்ளுங்கள். நாட்டு ம ருந்து கடைகளில் சணப்பை பொடி என்று கேட்டால் கொடுப்பார்கள். இல்லையெனில் நேரடியாக சணப்பை விதையை வாங்கி நாம் பொடியாக்கி வைத்து கொள்ளலாம். தலைக்கு தேவையான நல்லெண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் சூடாக்கி, அரைத்து வைத்த சணப்பை பொடியை ஒரு ஸ்பூன் போட்டு சூடு செய்யுங்கள். 

மிதமான சூடு என்பது முக்கியம். சூடு நன்றாக ஆறியவுடன், அதாவது சூடு இருக்கவே கூடாது. சூடு ஆறியதும் இந்த எண்ணெய்யை தலையில் பரவலாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அடுத்த நாள் வேலைக்கு செல்பவர்கள், எண்ணெய் தேய்த்த தலையோடு செல்லக்கூடாது என நினைத்தால், வழக்கம் போல ஷாம்பூ போட்டு அலசிக்கொள்ளலாம். சீகைக்காய் போட்டு அலசினால் இன்னும் சிறப்பு. நேரமிருந்தால் வாரம் இருமுறை இதனை தொடருங்கள். இல்லையெனில் வாரம் ஒருமுறை போதுமானது. 

இவற்றுள் மிக மிக்கியமானது. சோயா விதையை அரைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துவது கூடவே கூடாது. அதே போல எண்ணெயில் பொடியை பயன்படுத்துவது என்பது அப்போது தேவையான பொடியை மட்டும் எண்ணெயில் போட்டு சூடாக்கி பயன்படுத்த வேண்டும். முழுதாக இருக்கும் பொடியை எல்லாம் கொட்டி, இனி வரும் வாரங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என இருப்பது கூடவே கூடாது. 

Share This Story

Written by

Akila View All Posts