கோட்டயம் மாவட்டம் முட்டுச்சிரா பகுதியைச் சேர்ந்தவர் 87 வயது மூதாட்டி எள்ளிகுட்டி பால். பக்கத்து மாவட்டமான இடுக்கியில் பூத்திருக்கும் அரிய நீலக்குறிஞ்சி பூக்களை காண வேண்டும் என்ற தனது கனவை தனது மகன்களிடம் தெரிவித்தார். அம்மாவின் விருப்பத்தை அறிந்த இரண்டு மகன்கள் ரோஜன் மற்றும் சத்யன் இருவரும் மூணாறு அருகே உள்ள கல்லிப்பாரா மலையை அடைய 100 கிமீ கீழே இறங்கினர்.
ஆனால் பூக்கள் வளர்ந்த மலையுச்சிக்கு வாகனம் செல்லக்கூடிய சாலைகள் இல்லாததால், அவர்கள் தங்கள் அம்மாவை தோளில் சுமக்க முடிவு செய்தனர். இரண்டு மகன்களும் தங்கள் அம்மாவைத் தோளில் தூக்கிக்கொண்டு ஊதா நீலக்குறிஞ்சி மலர்களால் மூடப்பட்ட மலையுச்சிக்கு சுமார் 1.5 கிலோமீட்டர் பயணம் செய்தனர்.
இப்போது ஆன்லைனில் வைரலான வீடியோவில், இரண்டு சகோதரர்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தோளில் சுமந்து செல்வதைக் காண முடிந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மேற்குத் தொடர்ச்சி மலையில் பூக்கும் இந்த மலர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால்தான் பாட்டி அந்த பூக்களை பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.