notification 20
Spellbound
இந்தப் படம் தோல்வி அடையும் என்று தெரிந்தே எடுத்த படம்! அவங்க போதைக்கு பொது மக்கள் தான் ஊறுகாயா? டைரக்டர் பண்ணும் அழிச்சாட்டியம்!

எந்த படமும் எடுக்கும் போதே தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்படுவதில்லை. நேரம், காலம் சூழ்நிலையை பொருத்து அப்படி மாறிவிடுகிறது. பாதி இயக்குனர்கள் சொன்ன கதையை அப்படியே படமாக எடுப்பதே இல்லை. நிறைய படங்களின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாகும். கிட்டத்தட்ட சினிமாவும் ஷேர் மார்கெட் மாதிரி தான். சில நேரங்களில் எதிர்பார்த்ததை விட அள்ளிக்கொடுக்கும். சில நேரங்களில் மெனக்கெட்டு உழைப்பை கொட்டியிருந்த போதிலும், மரண தோல்வியை தழுவும். மக்களின் மன நிலையை கணிப்பது அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல.

எனக்கு தெரிந்து அந்தக்காலத்தில், தோல்வி அடைய வேண்டுமென்றே ஒரு படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தை எடுத்தவர் பாலசந்தர் அவர்கள். ரொம்ப யோசிக்க வேண்டாம் "வானமே எல்லை" படம் தான் அது. விசாரித்த வரையில், வருமான வரியை குறைவாக கட்ட வேண்டும் என்ற நோக்கில், குறைந்த பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படி சில அதிசயங்களும் நடக்கும்.

கருப்பு பண முதலைகளின் வெள்ளை மனிதர் சங்கர்னு கோலிவுட் வட்டாரத்தில் சொல்லுவாங்க. சில படங்கள் கதை கூறும் அருமையாக இருக்கும் ஆனால் டைரக்டர் படத்தை எடுக்கும் போது, ஏதோ வேற மாதிரி எடுப்பார். அப்போதே படக்குழுவில் உள்ள சிலருக்கு இந்த படத்தை வெளியிட்டால் தோல்வி என்று தெரிந்து விடும். ஆனாலும் படத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் பாதி பணம் ஏற்கனவே செலவாகி இருக்கும். அதனால் பாதியிலும் கைவிட முடியாது. எப்படியாவது திரையரங்கில் வெளியிட்டு காட்சிகளை ஓட்டி, படத்தின் சேட்டலைட் உரிமையை விற்க கடைசி கட்டத்தில் முயற்சி நடக்கும்.

நடுநிசி நாய்கள், ஜெய் நடித்த "அதே நேரம் அதே இடம்", மிஸ்கின் இயக்கிய முகமூடி போன்ற படங்கள் இந்த லிஸ்டில் வரும். ஒரு படம் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் பார்வையாளர்களாகிய மக்கள் நம்மிடமே இருக்கு. ஒரே மாதிரி எடுக்கப்படும் காஞ்சனா வெற்றி பெறும். ஆனால் அன்பே சிவம், ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம்  போன்ற படங்கள் வணிக ரீதியாக தோல்வி. அடுத்து என்ன நடக்குமென்றே கணிக்க முடியாத சினிமா துறையில், கிடைத்த வரையில் இலாபம் என சுருட்டப்படுவது மக்களின் அறியாமையே. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts