Daily News

தூங்குவதற்கு இப்படி ஒரு ஏற்பாடா? தூக்கமின்மையால் இருப்போருக்கு பிரத்யேகமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தனியார் ஹோட்டல்!

May 13 2022 03:42:00 PM

வளர்ந்து வரும் காலகட்டத்தில் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அந்த காலங்களில் நாள் முழுக்க உடல் உழைப்பைக் கொடுத்து வேலை செய்துவிட்டு வருவார்கள். வந்த பிறகு இரவு வேளையில் திண்ணையில் படுத்தாலுமே நல்ல தூக்கம் தூங்குவார்கள். ஆனால் இந்த காலத்தில் வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் தூங்குவதற்கு தனியறை இருந்தாலும் யாரும்  போதிய அளவிற்கு தூங்குவதில்லை.

sleeping facilities hotel

இந்நிலையில் நல்ல தூக்கம் தூங்குவதற்கெனவே கொல்கத்தாவில் உள்ள ITC நட்சத்திர ஹோட்டல் ஒன்று பிரத்தியேக அறைகளை ஏற்பாடு செய்துள்ளது. அந்த அறை முழுவதும் நல்ல தூக்கம் தூங்குவதற்கான சிறப்பான மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்புகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் பாரம்பரிய நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூலப் பொருட்களை பயன்படுத்தி நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உணவுகள் தயார் செய்யப்படுகின்றது. சிக்கன் சுப்ரீம், பால் போன்ற உணவு வகைகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

sleeping facilities hotel

அறைகளுக்குள் சூரிய ஒளி ஊடுருவலை 0 வரை குறைக்கும் திரைச்சீலைகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மனதிற்கு அமைதி தரும் வகையில் நரம்புகளை தளர்வடையச்  செய்யும் மென்மையான இசை போன்றவற்றை ஏற்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகிறது.

sleeping facilities hotel

நல்ல பஞ்சு போன்ற இதமான தலையணைகள் மற்றும் தலைவலியால் அவதிப்படுவோர்களுக்கென மிகவும் தளர்வான வகையில் தலையணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாத மசாஜ், இதமான ஆயுர்வேத எண்ணெய், குட்நைட் பானங்கள் என பல்வேறு வசதிகள் இந்த ஹோட்டலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலை செய்து சம்பாதித்துவிட்டு உறங்கும் காலம் மாறி தற்போது உறங்குவதற்கு என தனியாக செலவு செய்யும் காலம் வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.