நம்ம ஊருல இருக்க எல்லா பசங்களுக்கும் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் வந்ததுக்கு அப்புறம் சிக்ஸ் பேக் வைக்கணும்ன்னு ரொம்ப ஆசை. சிலர் சூர்யாவை பார்த்து ரொம்ப கஷ்டப்பட்டு உடற்பயிற்சி எல்லாம் செஞ்சு சிக்ஸ் பேக் வைக்க ஆரம்பிச்சாங்க. ஒல்லியா இருக்க பசங்களை பாத்தா தம்பி நீ நல்லா சாப்பிடு, வல்லு வதக்குன்னு கறியும், முட்டையுமா சாப்பிடு அப்போதான் உடம்பு நல்லா கட்டுமஸ்தா இருக்கும்ன்னு சொல்லுவாங்க.
உடற்பயிற்சி செஞ்சா மட்டும் போதுமா, சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வந்துருமா என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கான உணவையும் எடுத்துக்கொண்டால் மட்டுமே கட்டுமஸ்தான உடம்பை பெற முடியும். சிலர் சொல்லுவாங்க, தினமும் அசைவம் சாப்பிடுங்க, உடம்பு கம்பீரமா இருக்கும்ன்னு. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம், துப்பாக்கி படத்தின் வில்லன் நடிகர் வித்யுத் ஜமால், சோனு சூட், தமிழ் நடிகர் மாதவன், ஹிந்தி நடிகர் ஷாஹித் கபூர் போன்ற முன்னணி பிரபலங்கள் தங்கள் வாழ்நாளில் இதுவரை அசைவ உணவையே சாப்பிட்டதில்லையாம். இந்த நடிகர்கள் அனைவரும் சுத்தமான சைவ விரும்பிகள். இவங்க மட்டும் இல்ல, இன்னும் நிறைய கட்டுமஸ்தான உடம்பை வைத்துள்ள முன்னணி நடிகர்களும் சைவ விரும்பிகள் தான். எனவே அசைவம் சாப்பிடுவதற்கும், கட்டுமஸ்தான உடம்பை பெறுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது இதில் இருந்து தெளிவாகிறது.