தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான பீஸ்ட் படம் சரியாக ஓடவில்லை. தற்போது நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே இயக்குனர் அட்லீயின் அசிஸ்டன்ட் டைரக்டராக மெர்சல் படத்தில் பணிபுரிந்துள்ளார். அந்த நேரத்தில் நடிகர் விஜய்யுடன் பழகும் வாய்ப்பு கிடைத்து தன்னுடைய சார்ட் பிலிம் ஒன்றை விஜய்யிடம் காட்டி இருக்கிறார்.
அந்த ஷார்ட் பிலிம் விஜய்க்கு ரொம்ப பிடித்துள்ளது. அந்த ஷார்ட் பிலிம் படத்தை தான் தற்போது சிபி சக்கரவர்த்தி வெள்ளித்திரையில் டான் படமாக எடுத்துள்ளார். இந்த சிபி சக்கரவர்த்தி விஜய்க்கு ஒரு கதை சொல்லியுள்ளதாகவும் அந்த கதை விஜய்க்கு ரொம்ப பிடித்ததாகவும் தற்போது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. விஜய்யின் அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்குவார் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த செய்திகளில் எல்லாம் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்றும், எல்லாம் வெறும் வதந்திதான் என்றும் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.