சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. மற்ற முன்னணி நடிகர்களின் படங்களை போல இல்லாமல் இந்த படம் வெளியான நேரத்தில் இருந்தே படத்துக்கு மிகவும் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி நடித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு புகழுக்கும், சிவாங்கிக்கும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இவர்கள் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். இருந்தும் சினிமாவில் இவர்கள் செய்யும் காமெடி காட்சிகளை யாரும் அதிகம் ரசிப்பதில்லை. காமெடி செய்கிறேன் என்கிற பெயரில் இவர்கள் படத்தில் அதிக மொக்கை போடுகிறார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டான் படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர் ஒருவர் சிவாங்கியின் நடிப்பு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி நல்லா பாடுவாங்க. சிவாங்கி ஒரு கொரங்கு, லூசு, அந்த பொண்ண தயவு செஞ்சு நடிக்க வேணாம்ன்னு சொல்லுங்க, அடுத்த முறை அந்த பொண்ண ஸ்கிரீன்ல பாத்தேன், ஸ்கிரீனை கிழிச்சுருவேன், அசிங்க அசிங்கமா கேட்டுபுடுவேன் என்று சிவாங்கியை கேவலமாக கலாய்த்து தள்ளியுள்ளார். நடிப்பு பிடிக்கலைன்னா போக வேண்டிதானே, அதுக்காக இப்படி எல்லாமா பேசுவீங்க என்று ரசிகர்கள் சிவாங்கியை கலாய்த்த நபருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.