விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் வரும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காரணம் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும், நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களும், நடுவர்களும்தான்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. அந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் சிவாங்கி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கடைசிவரை தொடர முடியாமல் பாதியில் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவரின் சுட்டித்தனம் அனைவராலும் ஈர்க்கப்பட்டது.
அதற்குப் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நுழைந்தார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள்தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின்னணி காரணமாவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி கலந்து கொண்டதன் பிறகு சிவாங்கிகென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. சிவாங்கி அஸ்வின் இணை மிகவும் பிரபலமாக அனைவராலும் பார்த்து ரசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சினிமாக்களில் நடிப்பது, பாடல் பாடுவது என திரையுலகில் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் வெளியான டான் திரைப்படத்தில் சிவாங்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவாங்கி அவரின் காதலர் எப்படி இருக்க வேண்டும் என கூறிய செய்தி ஒன்று அனைவரிடத்திலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு விஜய்தேவர்கொண்டா போல காதலர் கிடைக்க வேண்டுமென சிவாங்கி கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் அப்போ அஸ்வின் நிலைமை என்ன ஆகும் என கலாய்க்கும்படி கேள்விகள் கேட்டு வருகின்றனர்.