பெரிய கப்பல்கள் பொதுவாக அதிகஅளவில் கடலில் வாழும் கடல் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. ரிங்கோடோன் டைபஸ் என்னும் சுறா இனம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த இனத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடலில் மிகப்பெரிய கப்பல்களால் இந்த சுறா இனம் இறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சரக்கு கப்பல், எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல் போன்ற பெரிய கப்பல்கள் பயணம் செய்யும் வழித்தடத்தில் தான் இந்த சுறாக்களின் இனமும் பயணம் செய்கிறது. இதை உறுதி செய்வதற்காக அந்த சுறாக்களின் மீது மின்னணு கருவிகளை பொறுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 350 சுறாக்கள் மீது மின்னணு கருவிகளை பொருத்தி அந்த சுறாக்களின் பயணங்களை ஆராய்ச்சி செய்தனர்.
அப்போது அந்த சுறாக்கள் அனைத்தும் கடலின் ஆழத்திற்கு சென்றுவிடுவது மின்னணு கருவிகளின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களிலேயே அந்த சுறாக்களின் இறந்த உடல் கடற்கரையில் மிதந்துள்ளது. பெரிய கப்பல் இந்த சுறாக்களை தாக்கியதால் தான் சுறாக்கள் இறந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சுறா இனம் அழிந்து வருவதால் இந்த இனத்தை பாதுகாக்க ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று ஆரய்ச்சியாளர்கள் பன்னாட்டுக் கடல் வாணிபக் கழகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.