Spellbound

பாகுபலி அளவுக்கு பில்ட் அப் கொடுக்கும்போதே தெரியும்! படம் அட்டு பிளாப் ஆகிடும்ன்னு! எல்லாரும் ராஜமௌலி மாதிரி சூனா பானா ஆகிற முடியுமா?

Jun 10 2022 03:58:00 PM

ஒரு படம் வெளியாவதற்கு முன்னர் எந்த அளவுக்கு விளம்பரம் செய்யப்படுகிறதோ அந்த விளம்பரத்தை பொறுத்து தான் அந்த படத்தின் வெற்றியும் தோல்வியும் அமையும். நீங்க எப்படி ப்ரமோஷன் பண்றீங்களோ அதுல கொஞ்சமாவது அந்த படத்தில் ரசிகர்களை திருப்தி படுத்தும் படியான விஷயங்கள் இருந்தால் மட்டும் தான் படம் பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள்.

samrat prithviraj flop bollywood shock

சும்மா பேருக்கு விளம்பரம் பண்ணிவிட்டு படத்தில் ஒன்னும் இல்லைன்னா ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றிவிடுவார்கள். அந்த மாதிரியான ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில் சாம்ராட் பிரித்விராஜ் படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்னர் இது பாகுபலி, கே.ஜி.எப். படங்களுக்கே டப் கொடுக்கும் என்கிற அளவில் படத்திற்கு ப்ரமோஷன் செய்தார்கள்.

samrat prithviraj flop bollywood shock

இந்த சாம்ராட் பிரித்விராஜ் படம் 200 கோடி ரூபாய் பொருட்ச்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டது. ஆனால் படம் வெளியான நாள் முதலே படத்திற்கு ரொம்ப எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவர தொடங்கியது. படம் வெளியாகி வெறும் ஆறு நாட்களில் நிறைய திரையரங்குகளில் ரசிகர்கள் ஒருவர் கூட வராததால் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டார்கள். உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஒரே வாரத்தில் இப்புடி தியேட்டரில் இருந்து தூக்குவாங்க என்று அக்ஷய் குமார் கூட நினைத்திருக்க மாட்டார். படம் இதுவரை 50 கோடி ரூபாய் கூட கலெக்சன் செய்யவில்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

samrat prithviraj flop bollywood shock