தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, தங்கமகன், நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த சமந்தாவின் கதீஜா கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனான தெலுங்கு நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி தங்களின் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். விவாகரத்துக்குப் பிறகு இருவரும் தங்களின் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.
சமந்தா நடித்த படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் தான் அவரின் விவாகரத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என பேசப்பட்டது. ஆனால் நடிகை சமந்தா விவாகரத்திற்கு பின்னர் தனது பட சூட்டிங்கிலும், திரைப்பட வெளியீட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இவர்களின் விவாகரத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்நிலையில் நடிகை சமந்தாவின் வடிவமைப்பாளர் ப்ரீதம் ஜூகல்கர் காரணம் என இணையத்தில் பேசப்பட்டது. இருப்பினும் தங்களின் உறவு சகோதர சகோதரி போன்றது என்று அவர் அதை மறுத்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து அவர்களைப் பற்றி ரசிகர்களும் பேசி வருகின்றனர்.