அந்தக் காலங்களில் பகலில் வேலை செய்வோம், மாலையில் வீடு திரும்புவோம். இரவு உணவு சாப்பிட்டதும் கீழே பாயை விரித்தாலே போதும் நல்ல தூக்கம் தூங்குவோம். நல்ல ஆரோக்கியமான ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு நல்ல உறக்கம் தேவையான ஒன்று. ஆனால் வளர்ந்து வரும் இந்த காலகட்டங்களில் மக்களிடையே சரியான தூக்கம் என்பது இல்லாமல் போனது.
தூங்குவதற்கென மக்கள் பல்வேறு வழிகளை தேட ஆரம்பித்துவிட்டனர். படுக்கை அறை அமைப்பு, மெத்தைகளின் தரம் என தூங்குவதற்கு பல்வேறு வசதிகளை தேடி வருகிறோம். அதிலும் தற்போது சமீபத்தில் நல்ல தூக்கம் வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கூறி தனியார் ஹோட்டல் ஒன்று அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அந்த ஹோட்டலில் நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூங்குவதற்கு மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? படுத்து நன்றாக உறங்கினால் மட்டும் போதும். இதற்கு மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.
படுக்கை அறையில் உறங்குவதற்கு பயன்படுத்தும் மெத்தைகளைத் தயாரிக்கும் கம்பெனிதான் தூங்குவதற்கு 4 லட்ச ரூபாய் சம்பளத்தை கொடுக்கின்றனர். அதாவது அந்த மெத்தை கம்பெனியில் நிறைய மெத்தைகளை தயாரிக்கின்றனர்.
அந்த மெத்தைகள் மக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக அந்த மெத்தையில் இரவு முழுக்க தூங்க வைப்பார்களாம். அந்த மெத்தையில் தூங்கி எழுந்த பிறகு அவர் கூறும் விமர்சனங்களை கேட்பார்களாம்.
அவர்கள் கூறும் விமர்சனங்களை மையமாக கொண்டு மெத்தையில் தூக்கம் எப்படி வந்தது என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு அடுத்த மெத்தையின் தயாரிப்பில் டிசைன்களை மாற்றிக்கொள்வார்கள். இதற்கு மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் என கூறப்படுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த கம்பெனி எங்கு உள்ளது, அந்த வேலைக்கு எப்படி சேர வேண்டுமென ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.