notification 20
HotPicks
பார்க்கத்தான் ரொம்ப அப்புராணி மாதிரி இருக்கும்! பண்றதெல்லாம் திருட்டு வேலை! இந்த சிட்டு குருவி பண்ணுன விஷயத்தை கேள்விப்பட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

ஒரு சாதாரண சிட்டுக்குருவி என்ன பண்ணும். தான் உண்டு தன்னுடைய வேலை உண்டுன்னு வயல்வெளியில் சுற்றி திரிஞ்சு தன்னுடைய இரையை தேடித் திரியும். பெருசா யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் பண்ணாது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பரவலாக வாழும் சின்னான் என்னும் சிட்டுக்குருவி (சிவப்பு வாலடி குருவி) இந்தியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு செல்லும்போது அங்கு மோசமான பல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆமாங்க. இந்த சின்னான் என்னும் சிட்டுக்குருவி நம் நாட்டில் எந்தவிதமான மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. ஹவாய் நாட்டில் மிகவும் மோசமான விளைவை உண்டாக்குகிறது. அங்குள்ள காடுகளையும், தாவரங்களையும் அதிக அளவில் சேதப்படுத்துகிறது. மா, பலா, பப்பாளி போன்ற பழங்களை விழுங்கி சேதப்படுத்துகிறது.

இந்த சின்னான் பறவைக்கு ஆர்கிட் மொட்டுக்களின் சுவை ரொம்ப பிடிக்கும். இந்த ஆர்கிட் மொட்டுக்களை விழுங்கி ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வரை ஹவாய் நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த பறவையை பார்த்தவுடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நியூஸிலாந்து மற்றும் ஹவாய் நாட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த சின்னான் பறவையை அழிவை ஏற்படுத்தும் உயிரினங்கள் வரிசையில் இந்த நாட்டில் சேர்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Story

Written by

Karthick View All Posts