notification 20
Spellbound
ரஜினிகாந்த் கையால் தாலி எடுத்து கொடுத்து விக்னேஷ் சிவன் கட்ட வேண்டும் என்று நயன்தாரா சொன்னதற்கு காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேல் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். அண்மையில் நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தன்னுடைய கையால் தாலி எடுத்து கொடுத்து விக்னேஷ் சிவனை நயன்தாராவின் கழுத்தில் கட்ட வைத்தார்.

இப்படி ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்து கட்டவைத்தது நயன்தாராவின் விருப்பம் தான் என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள். திருமணம்  முடிந்த பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரை ரஜினிகாந்த் அந்த கல்யாண மண்டபத்தில் இருந்து மணமக்களை வாழ்த்தினார் என்றும் சொல்லப்படுகிறது. நயன்தாரா சினிமாவில் இந்த அளவு முன்னணி நடிகையாக வளம் வருவதற்கு ரஜினிகாந்த்தும் ஒரு வகையில் காரணம்.

சந்திரமுகி படத்தில் நயன்தாரா நடித்தபோது அவருடைய கதாபத்திரம் ரொம்ப டம்மியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவருக்கென ஒரு பாடல் கூட இயக்குனர் அமைக்கவில்லை. அதுக்கு அப்புறம் ரஜினியிடம் தன்னுடைய பிரச்சனையை சொல்லி நயன்தாரா புலம்பியுள்ளார். பின்னர் ரஜினிகாந்த் இயக்குனர் வாசுவிடம் பேசி நயன்தாராவிற்கென ஒரு பாட்டை அமைத்துள்ளார்.

சந்திரமுகி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தொடர்ந்து குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்களில் நயன்தாராவிற்கு வாய்ப்புகள் வழங்கினார். அண்மை காலத்தில் ரஜினிகாந்த்துடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகை நயன்தாரா மட்டுமே. ரஜினிகாந்த் அரசியலில் இறங்கி இருந்தால் நிச்சயம் அவர் தன்னுடன் நயன்தாராவையும் களத்தில் இறக்கி இருப்பார். எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதாவோ அதே போல ரஜினிகாந்தின் வெற்றிக்காக நயன்தாரா உழைத்திருப்பார். நயன்தாராவும் ரஜினிகாந்துடன் அரசியலில் இறங்கவே ஆசைப்பட்டார்.

ஆனால் அந்த சம்பவம் நடக்காததால் என் வாழ்க்கையை இந்த அளவுக்கு உயரத்திற்கு அழைத்துச் சென்ற தன்னுடைய ஆசான் ரஜினிகாந்த் கைகளால் தாலி எடுத்து கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்றும், ரஜினிகாந்த்துக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக நயன்தாரா ரஜினியின் கைகளால் தாலி எடுத்துக் கொடுக்க சொன்னார் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts