கமலஹாசன் நடிப்பில் அண்மையில் விக்ரம் படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, அர்ஜுன் தாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு லோகேஷ் கனகராஜின் நேர்த்தியான திரைக்கதை தான் காரணம் என்று சொன்னாலும் கமல் இந்த படத்தை உலக அளவில் ப்ரமோஷன் செய்தார்.
தன்னுடைய 67 வயதில் எந்த ஒரு சிரமத்தையும் பார்க்காமல் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்று ப்ரமோஷன் செய்தார் கமல். இந்த ப்ரமோஷனும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் அண்மையில் பேட்டி ஒன்றில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கலந்து கொள்வது பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.
விக்ரம் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்றால் அதுக்கு படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஒரு காரணம். அதுமட்டுமல்லாமல் கமல் இந்த படத்தை மிகவும் அருமையாக ப்ரமோஷன் செய்தார். அவர் ப்ரமோஷன் செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கு. அந்த படத்தை தயாரித்தவரே கமல் தான். தன்னுடைய சொந்த காசு என்பதால் அவரே களத்தில் இறங்கி ப்ரமோஷன் செய்தார். கமல் அவரோட சொந்த படத்துக்கு மட்டும் இல்லாம இனி அவர் நடிக்கிற எல்லா படத்துக்கும் இதே மாதிரி ப்ரமோஷன் பண்ணணும்.
எல்லா முன்னணி நடிகர்களும் இதே மாதிரி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு படத்தை பிரபலப் படுத்தணும். 100 கோடி சம்பளம் கொடுக்குற ஒரு தயாரிப்பாளர் படத்தின் ப்ரமோஷன் சம்மந்தமான விழாக்களில் நீங்க கலந்துக்கணும்ன்னு நடிகர்கிட்ட அக்ரீமெண்ட் போடணும். அப்போதான் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று கே.ராஜன் பேட்டி கொடுத்தார். இனியாவது இந்த முன்னணி நடிகர்கள் படம் சம்மந்தமான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று நிறைய தயாரிப்பாளர்கள் விரும்புவதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.