ராஜமௌலி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மகதீரா படம் தான். இதுதான் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான முதல் படம் என்று நாம் நினைப்போம். அந்த மகதீரா படத்துக்கு முன்பே பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் இந்த ராஜமௌலி. இவர் இயக்கத்தில் முதன் முதலாக ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ஸ்டூடன்ட் நம்பர் 1 படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தை தமிழில் சத்யராஜின் மகன் சிபிராஜை வைத்து எடுத்து பிளாப் ஆக்கி விட்டனர்.
பின்னர் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சிம்மாத்திரி படத்தை இயக்கினார். அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதே படத்தை தமிழில் விஜயகாந்தை வைத்து கஜேந்திரா என்ற படத்தை எடுத்து பிளாப் ஆக்கிவிட்டனர். பின்னர் ஜெனிலியா, நிதின் வைத்து சை என்ற படத்தை எடுத்திருந்தார். ரக்பி விளையாட்டை மையமாக வைத்து எடுத்த முதல் படமும் இதுதான். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் பிரபாஸை வைத்து சத்ரபதி படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.
ரவிதேஜாவை வைத்து விக்ரமராயுடு படத்தை இயக்கினார். இந்த படம் தமிழில் சிறுத்தை என்ற பெயரில் கார்த்தி நடித்திருந்தார். இந்த விக்ரமராயுடு படம் வெளியான எல்லா மொழிகளிலும் மெகா ஹிட் அடித்தது. பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான யமதொங்கா, மகதீரா, மரியாத ராமன்னா, நான் ஈ, பாகுபலி 1, பாகுபலி 2, RRR போன்ற எல்லா படங்களும் மெகா பிளாக் பாஸ்டர் படங்களாக அமைந்துவிட்டது.
இவருடைய இயக்கத்தில் வெளியான படங்களின் வெற்றிக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய கூட்டமே வேலைசெய்யும். இவருடைய தந்தை விஜயேந்திர பிரசாத்தின் கதை, ராஜமௌலியின் மனைவி ரமணி ராஜமௌலியின் ஆடை வடிவமைப்பு மற்றும் இவருடைய உறவினர் மரகதமணியின் இசை போன்றோர் ராஜமௌலியின் வெற்றிக்கு ஆரம்பம் முதல் இப்போதுவரை துணையாக இருந்துவருகிறார்கள்.