பொதுவாக நாம் ரயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட் எடுக்காமல் ஏறிவிட்டால் டிக்கெட் பரிசோதிக்கும் நபரிடம் நாம் சிக்கி விட்டால் அந்த டிக்கெட் பரிசோதிப்பவர் நம்மிடம் அபராத தொகை வாங்கிவிட்டு அடுத்த ஸ்டேஷனில் நம்மை ரயிலை விட்டு இறங்க சொல்லுவார்கள். இதுதான் பொதுவாக ரயிலில் நடக்கும் சம்பவம். ஆனால் ரயில்வேயில் உள்ள சில விதிமுறைகள் அந்த ரயில்வேயை சேர்ந்த நபர்களுக்கே தெரியாத சில சட்டங்கள் உள்ளது.
ரயிலில் ஒரு பெண் தனியாக பயணம் செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் டிக்கெட் எடுக்கவில்லை என்று பரிசோதகர் கண்டுபிடித்துவிட்டால் அந்த பெண்ணை ரயிலை விட்டு இறக்கி விடமுடியாது. தனியாக பயணம் செய்யும் பெண்களை இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட முடியாது. ஊர் பேர் தெரியாத ஸ்டேஷனில் இறங்கிவிட்டால் அவங்களுக்கு பாதுகாப்பு இருக்காது.
1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 139 விதிஎண்ணின் படி முதலில் ரயில் கண்காணிப்பு அறைக்கு டிக்கெட் பரிசோதனை செய்பவர் இந்த மாதிரி ஒரு பெண் டிக்கெட் எடுக்கவில்லை என்று தகவல் தெரிவிக்க வேண்டும். அதுக்கு அப்புறம் அடுத்த ஸ்டேஷனில் அந்த பெண்ணிடம் இருந்து காசு வாங்கி டிக்கெட் எடுத்து அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்.
அந்த பெண் பத்திரமாக பயணம் செய்ய வைப்பது அந்த டிக்கெட் பரிசோதனை செய்பவரின் கடமை. ஒருவேளை அந்த டிக்கெட் பரிசோதனை செய்பவருடன் பெண் காவலர்கள் இருந்தால் அந்த பெண்ணை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டு அந்த பெண்ணை பத்திரமாக வேறொரு ரயிலில் ஏற்றிவிடுவது பெண் காவலர்களின் கடமை. அதேபோல 12 வயதிற்கு உட்பட்ட ஆண் குழந்தைகள் மட்டுமே பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்ய முடியும் என்கிற விதியும் ரயில்வேயில் இருக்கிறது.