Daily News

தங்கம் வாங்கிய பிறகும் தொடரும் நெருக்கடி! எப்படி சமாளிக்கப்போகிறார் பி.வி.சிந்து?

Aug 11 2022 09:42:00 AM

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வாங்கி அசத்தினார் இந்தியாவின் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. தங்கப்பதக்கம் வாங்கிய இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் தங்கப்பதக்கம் வாங்கியிருந்தாலும் அந்த சந்தோசத்தை கொண்டாட முடியாத சூழல் சிந்துவிற்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

badminton championship sindhu gold medal

காமென்வெல்த் வெற்றியை பெரிதாக கொண்டாடிக்கொண்டு இருந்தால் அடுத்து வரவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் கவனம் செலுத்த முடியாது. அது மட்டுமின்றி சிந்துவுக்கு இந்த தொடர் மிகுந்த சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில் அவர் மிகவும் கடினமான போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் அவருக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

badminton championship sindhu gold medal

ஆசிய சாம்பியன் வாங் ஷீ, இதுவரை சிந்துவிடம் தோல்வியே கண்டிராத தென்கொரிய வீராங்கனை ஆன் சி யங் ஆகியோர் சிந்து இடம்பிடித்துள்ள அதே பிரிவில் உள்ளனர். இதனால் சிந்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளை வெல்வதற்கு கடினமாக போராட வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருப்பதால் தான் அவரால் காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாட முடியாத நிலைமை உருவாகியுள்ளதாம்.

badminton championship sindhu gold medal

உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை சிந்து ஏற்கனவே கைப்பற்றியுள்ளார் என்றாலும் இந்த முறை அந்த மகுடத்தை கைப்பற்ற கடினமான பாதையை அவர் கடந்து செல்ல வேண்டியிருப்பதால் இந்த சவாலை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சிந்து இந்த தொடரில் நேரடியாக இரண்டாம் சுற்று போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.