Misc

இந்த சாமியின் படத்தை மட்டும் தெரிஞ்சோ தெரியாமலோ வீட்டில் வச்சு வழிபடக்கூடாது! எதிரிகளின் தொல்லை முற்றிலும் ஒழிய இந்த கடவுளை வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும்!

May 26 2022 04:00:00 PM

கும்பகோணத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஐயாவாடி என்னும் ஊர் அமைந்துள்ளது. இந்த அய்யாவாடியில் ப்ரதிங்கரா ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ரொம்ப பேமஸ். ரொம்ப பழமையான கோவிலும் கூட. ராமாயணம் காலத்தில் ராவணனின் மகனான இந்திரஜித் தன்னுடைய எதிரிகள் அழிய வேண்டும் என்று ப்ரதிங்கரா தேவியை நினைத்து நிகும்புலா பூஜை நடத்துவார்.

prathinga devi kumbakonam

அப்படி இந்திரஜித் அந்த பூஜையை செய்துவிட்டால் ராவணனின் எல்லா எதிரிகளும் அழிந்துவிடுவார்கள் என்று யோசித்து அந்த பூஜையை நடக்க முடியாமல் கலைத்துவிடுவார் அனுமான். அந்த ராமாயண காலத்திலேயே ப்ரதிங்கரா தேவியை வழிபடும் பழக்கம் நம் நாட்டில் இருந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் இந்த ப்ரதிங்கரா தேவியின் நிகும்புலா பூஜையில் சில வருடங்களுக்கு முன்னர் கலந்து கொண்டு தேர்தலில் அபார வெற்றி பெற்றதாக சொல்லப்படுகிறது.

prathinga devi kumbakonam

இந்த ப்ரதிங்கரா தேவியின் புகைப்படத்தை வீட்டில் வைத்து எப்போதும் வழிபடக்கூடாது. நம் எதிரிகளின் தொல்லைகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ப்ரதிங்கரா தேவியின் நிகும்புலா பூஜையில் கலந்து கொண்டு அக்னிகுண்டத்தில் சிகப்பு மிளகாயை வீசினால் நம் எதிரிகள் அழிந்து போவார்கள் என்பது ஐதீகம். உலகில் இந்த ப்ரதிங்கரா தேவிக்கு அதிக இடங்களில் ஆலயம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

prathinga devi kumbakonam