notification 20
Hugs & Kisses
ஒரு ஆணுக்கு பெண்ணை பிடித்துவிட்டால் அவர்களுடன் சேர்ந்து வாழலாம் என்னும் விசித்திர பழக்கம் கொண்ட நாடு! தினமும் காலை கடவுளுக்கு மதுவை பிரசாதமாக வைத்து வழிபடும் பழக்கமும் இங்க தான் இருக்கு!

நீங்க உண்மையில் இயற்கையை விரும்பி ரசிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால் பூட்டான் நாட்டுக்கு செல்லுங்கள். இங்கு இந்த இடம் தான் அழகாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இந்த பூட்டான் நாடே ரொம்ப அழகாக இருக்கும். இங்கு மொத்தம் 7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த நாட்டில் குடும்பம், அப்பா, அம்மா, சொந்தபந்தம் என்ற எந்த ஒரு நடைமுறையும் கிடையாது.

ஒரு பெண் எந்த ஆணுடனும் சேர்ந்து வாழலாம். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் அந்த ஆண் அடுத்த நிமிடமே அந்த பெண்ணிடம் சொல்லலாம். அந்த பெண்ணுக்கும் அந்த ஆணை உடனே பிடித்துவிட்டால் அந்த பெண்ணின் வீட்டில் சம்மதம் தெரிவித்தால் அங்கேயே அந்த ஆண் வசிக்கலாம். இதற்கு எந்த தடையும் கிடையாது. அந்த பெண்ணுக்கு ஆணை பிடிக்க வில்லை என்றால் எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லிவிடுவார்.

இந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தை ஒருவேளை அந்த தம்பதிகள் பிரிந்து விட்டால் அனாதை ஆகாது. அந்த பெண்ணோ அல்லது ஆணோ அவர்களின் உறவினர்கள் அந்த குழந்தையை வளர்ப்பார்கள். தினமும் காலை கடவுளுக்கு மதுவை பிரசாதமாக படைப்பார்கள். பின்னர் அந்த மதுவை அனைவரும் அருந்திவிட்டு தங்கள் வேலையை தொடங்குவார்கள். நம்ம ஊர் மாதிரி தண்ணி அடிச்சுட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கமாட்டார்கள். எல்லாமே அளவா இருப்பாங்க, அந்த நாடு ரொம்ப அமைதியான நாடு. அதுமட்டும் இல்லாம அந்த நாடு ரொம்ப தூய்மையா இருக்கும்.

பூட்டான் நாட்டில் கல்வியும், மருத்துவமும் இலவசம். வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் மாணவர்களின் கல்வி மற்றும் மருத்துவ செலவை அந்த பூட்டான் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். பூட்டான் நாட்டிற்கு இந்திய ராணுவம் பாதுகாப்பு வழங்குகிறது. இந்தியா பூட்டான் இடையே பாயும் பிரம்மபுத்திரா நதியில் இருந்து டில்லிக்கு மின்சாரம் தயாரித்து கொடுக்கப்படுகிறது. இதற்காக பூட்டானில் வாழும் மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 10000 ரூபாய் இந்திய அரசு சார்பாக வழங்கப்படும்  என்றும் சொல்லப்படுகிறது.

Share This Story

Written by

Karthick View All Posts