Daily News

இது என்ன வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கே! பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நீங்களே இப்படி பண்ணலாமா?

May 14 2022 11:06:00 AM

மக்களுக்கு எப்பவுமே போலீஸ்காரங்கன்னா மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கும். எல்லா போலீஸ்காரங்களும் தப்பானவங்க இல்ல என்றாலும் சிலர் செய்யும் மோசமான விஷயங்களால் ஒட்டு மொத்த காவல் துறையையே மக்கள் தப்பாக நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் தன் கணவருடன் பைபாஸ் நெடுஞ்சாலையில் தாபா ஒன்றை நடத்தி வருகிறார்.

police constable crime against dhabha owner

சூளகிரி காவல்நிலையத்தை சேர்ந்த முருகானந்தம் மற்றும் மாரியப்பன் என்ற இரண்டு காவலர்கள் அடிக்கடி இந்த தாபாவிற்கு வந்து உணவு வாங்கிச் செல்வார்கள். அப்படி இவர்கள் வரும் நேரத்தில் அந்த பெண்ணிடமும் கணவரிடமும் காசு குடுங்க என்று மிரட்டி இருக்கிறார்கள். காசு தரமறுத்தால் பெங்களூர் மதுபானத்தையும், கஞ்சா பொட்டலங்களையும் உங்கள் கடைக்குள் வைத்து நீங்க இதை எல்லாம் விக்குறீங்க என்று சொல்லி உங்களை கைது செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

police constable crime against dhabha owner

அதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணை இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  மனவிரக்தி அடைந்த அந்த பெண் அந்த இரண்டு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதை போல மக்களை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே இப்படி நடந்துகொள்வது ரொம்ப தப்பு என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

police constable crime against dhabha owner