பெண்கள் ஒவ்வொரு மாதமும் மா தவிடாய் நாட்களில் உடலாலும், மனதாலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் பெண்கள் அந்த நாட்களில் அதிகம் வேலை செய்ய முடியவில்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகம் உள்ளனர்.
அந்த முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுத்தால் பரவாயில்லையே என்று பெண்கள் நினைக்கின்றனர். அந்த வகையில் மாதவிடாய் நாட்களில் முதல் மூன்று நாட்கள் மாதந்தோறும் விடுமுறை அளிப்பதற்கு ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. மாதவிடாய் நாட்களில் விடுமுறை கொடுக்கும் முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை அந்நாடு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை உலகெங்கிலும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகனாக கொண்டாடப்பட்ட நடிகர் மோகன் தற்போது ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இந்த படத்தை இயக்குகிறார். சாதாரண மனிதனாக இருந்து சமயத்தில் தன் கோபத்தை வெளிக்கொண்டுவரும் ஆக்ஷன் நிறைந்த படமாக உள்ளது. இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கிறார்.
இந்தப்படத்தில் தந்தை மகளுக்கு இடையேயான உறவு காட்டப்பட்டுள்ளது. மோகன் தனது மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று தன் மகளின் மாதவிடாய் காலத்தில் விடுமுறை கேட்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அரசு அறிவித்துள்ள மாதவிடாய் நாட்களில் மூன்று நாட்கள் விடுமுறை என்பது மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும் அதை போலவே நம் தமிழகத்திலும் மூன்று நாட்கள் விடுமுறை தர வேண்டுமென படக்குழுவினர் கேட்டுள்ளனர்.