notification 20
His & Her
வரவிருந்த மிகப்பெரிய ஆபத்தை டிக்டாக் வீடியோவில் சொன்ன ரசிகர்கள்! அதிர்ஷ்டத்தில் உயிர்பிழைத்த பிரபலம் - ஒருத்தங்க உடலை இவ்வளோ உன்னிப்பா பார்ப்பாங்களா?

டிக்-டாக் வீடியோக்களுக்கு இரண்டு முகம் இருக்கு. அந்த வீடியோவில் வருவதை எல்லாம் உண்மை என்று நம்பி வாழ்க்கையை தொலைத்தவங்களும்  இருக்காங்க. செல்போன் பயன்படுத்த தெரியவில்லை என்றாலும், தன்னால் முடிந்ததை வெளிக்காட்டி பிரபலமடைந்த ஜி.பி முத்து மாதிரியான ஆட்களும் இருக்காங்க. நேரம் காலம் நல்லா இருந்து, அவங்க செய்யிறதெல்லாம் மக்களுக்கு பிடிச்சுப்போச்சுன்னா என்னைக்கும் கை விட மாட்டாங்க. 

இப்போ கூட ஜி.பி முத்து வீடியோ வந்தால், அப்பா ஸ்கிப் பண்ணாம பார்க்கிறாங்க. ஆயிரம் விமர்சனம் வந்தாலும், எந்த மாதிரியான பொழுதுபோக்கு மக்களுக்கு பிடிக்குதோ, அது தான் பிரபலமாகும். நீங்க ஒரு மணி நேர வீடியோ வெளியிட்டு, அதில் முழுக்க முழுக்க நல்ல கருத்து சொன்னா, யாரும் காது கொடுத்துக்கூட கேட்க மாட்டாங்க. இன்றைய உலகின் எதார்த்த நிலையை புரிந்து கொண்டால், வீணா டென்ஷன் ஆக மாட்டீங்க. 

இதிலும் சில அதிசயங்கள் நடக்குது. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். அமெரிக்காவில் ஒருத்தர் ஜாலிக்காக வீடியோ போட்டுக்கிட்டு இருந்திருக்காரு. அவருடைய வீடியோவை பார்க்கவும் ஃபேன்ஸ் இருக்காங்க. ஒரு நாள் ஷர்ட் போடாமல் வீடியோ பதிவிட்டுள்ளார். அவருடைய உடலை உன்னிப்பாக கவனித்த ரசிகர்கள், உங்களுடைய உடலில் கட்டி மாதிரி தெரியுது. உடனே ஹாஸ்பிடல் போய்  பாருங்க. இன்னும் கொஞ்ச நாள் விட்டா, அது வேறு விதமா மாறிப்போகும் என்று சொல்லி இருக்காங்க. 

ஆரம்பத்தில் ரசிகர்கள் சொன்னதை இவர் பெருசா எடுத்துக்கல. ஒரு சில வாரம் போகப்போக, ரசிகர்கள் சொன்ன மாதிரியே கட்டி வளர ஆரம்பித்துள்ளது. உடனே மருத்துவரை அணுகி கேட்டதற்கு, அது கே ன் சர் வகை கட்டின்னு சொல்லி இருக்காங்க. சாரியான நேரத்தில் போனதால் நல்லதா போச்சு. இன்னும் கொஞ்ச நாள் தாமதம் பண்ணியிருந்த அது உடல் முழுக்க பரவியிருக்கும் என சொல்லியிருக்காங்க. எப்படியோ, நாம் ஒண்ணுக்கும் ஆகாதுன்னு நினைத்த டிக்-டாக் ஒருவருடைய உயிரை காப்பாற்றி இருக்கிறது என்றால், நல்ல விஷயம் தானே!

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts