notification 20
Hugs & Kisses
சட்டப்படி எந்த உலக நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது? எல்லோரையும் மொட்டப் பசங்க ஆக்காம விட மாட்டாங்க போலயே!

அவஅவனுக்கு பொண்ணு கிடைப்பதே பெரும் பாடா இருக்கு, இந்த இலட்சணத்தில் இப்படி ஒரு சட்டம் போட்டால், கடைசி வரை கட்ட பிரம்மச்சாரியாகவே இருந்துவிட்டு போக வேண்டியது தான். உலகின் மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், நம்ம நாடு எவ்வளவோ தேவலங்க. 18 வயதை கடந்துவிட்டால் போதும், ஆணுக்கும், பெண்ணுக்கும் யாரை வேண்டுமானாலும் தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் உரிமை சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சில நாடுகளில் வாழ்க்கை துணையாக யார் வர வேண்டும் என்பதைத்கூட அரசாங்கமே முடிவு செய்கிறது. சவூதி அரேபியா சட்டங்கள் குறித்து நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. ஏற்கனவே எத்தனையோ கேள்விப்பட்டிருப்போம். அந்த லிஸ்டில் புதுசா ஒரு சட்டம் இணைந்திருக்கிறது. எல்லாமே ஒன்றுக்கொண்டு சளைத்தது கிடையாது. இனிமேல் உலகில் குறிப்பட்ட நாடுகளை சேர்ந்த பெண்களை, சவூதி அரேபிய ஆண்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாதாம். மீறி செய்வதாக இருந்தால், பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்து வர வேண்டும்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், சாட் மற்றும் மியன்மார் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களை, சவூதி அரேபிய ஆண்கள் ஏறெடுத்து பார்க்க கூடாது. அங்கு மேற்கண்ட நாடுகளை சேர்ந்த நான்கு இலட்சம் பெண்கள் வசித்து வருகின்றனர். இந்த நான்கு நாடுகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்றால், சவூதி அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்றாலும், ஒவ்வொரு முறையும் பல கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே, நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.

எவராவது குறிப்பிட்ட அந்த நாடுகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய விண்ணப்பித்தால், அரசு முறையாக பரிசீலிக்கும். விசாரணைக்கு பிறகு அரசு அனுமதி வழங்கினால் மாத்திரமே திருமணம் செய்து கொள்ள முடியும். அதே போல விவாகரத்துப் பெற்ற ஆண்கள், 6 மாதகாலம் வரை, புதிதாக இன்னொரு திருமணம் செய்துகொள்ள விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிக்கும் நபர் 25 வயதுக்கு மேற்றபட்டவராக இருத்தல் வேண்டும். மாவட்ட மேயரால் இது உறுதிப்படுத்தப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும். இப்படி ஒரு சட்டம் நம் நாட்டுக்கு வந்தால், 90ஸ் கிட்ஸ் நிலைமை என்னவென்று யோசித்துப்பாருங்கள். 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts