notification 20
Hugs & Kisses
பெண்கள் நைட்டி அணிந்து வெளியே வந்தால், ஏன் சில ஆண்களுக்கு பிடிப்பதில்லை? மனதில் என்ன நினைப்பாங்க தெரியுமா? அதெல்லாம் அந்த கேஸ்!

நைட்டி என்றாலே திருமணமான பெண்களின் யூனிபார்ம் மாதிரி ஆயிருச்சு. இரவில் நைட்டி போட்டுக்கொண்டு வெளியே வந்தாலே, மேலும் கீழும் பார்த்த காலம் எல்லாம் மாறி, இன்னைக்கு பகலில் சாவகாசமாக அணிந்து கொண்டு கடைத்தெருவுக்கு வரும் அளவுக்கு நிலை மேம்பட்டு இருக்கிறது. ஆண்களின் பார்வையும் மாறிவிட்டது. ஒரு காலத்தில் சுடிதார் அணிந்து, மேலே துப்பட்டா அணியாவிட்டால், ஏதோ பெரும்குற்றம் செய்துவிட்டது போல அந்த பெண்ணை குருகுருன்னு பார்ப்பாங்க. இன்னைக்கு அது தான் பேஷன்.

"துப்பட்டா போடுங்க தோழின்னு" கமெண்ட் போட்டா, எந்த பொண்ணுக்கும் உங்களை பிடிக்காது. மீறி ஏதாவது கேள்வி கேட்டால், அவங்களிடமும் திருப்பி கேட்க பல கேள்விகள் இருக்கு. ஆண்கள் லுங்கியை தொடை தெரிய மடித்துக்கட்டிக்கொண்டு வெளியே வருவதை எந்த பெண்ணும் கேள்வி கேட்பதில்லை. முண்டா பனியன் அணிந்து கொண்டு, நெஞ்சு முடி தெரிய இறக்கிவிட்டு தெருவில் நடந்து செல்வதை எந்த பெண்ணும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. அப்படி இருக்கும் போது, பெண்கள் ஆடை அணிவதை மட்டும் குறைகூறினால் என்ன நியாயம்? 

அதிலும் பெண்கள் நைட்டி அணிந்து வீட்டை விட்டு வெளியே வந்தால், ஒரு சில ஆண்களுக்கு பிடிக்காது. அணிந்து கொள்ள வசதியா இருக்கு. வேலை செய்ய எளிதா இருக்கு. இதை அணிவதால் என்ன தவறு இருக்கு? சரி என்ன காரணம்னு தெரிஞ்சு ஆகணும். பெண்கள் நைட்டி அணியா வேண்டாம் என்று சொல்லும் ஆண்களிடம் வெளிப்படையாகவே கேட்டேன். இவங்க நைட்டி அணிந்த பெண்களை ஏற்கனவே தவறான நோக்கத்தில் பார்த்திருக்காங்க. அதனால், அவங்க குடும்ப பெண்கள் நைட்டி அணிந்தால், பிறரும் அப்படி பார்த்துவிடுவார்கள் என்ற காரணத்திற்காக அதனை வெறுக்கின்றனர்.

அடேய்! மற்ற பெண்கள் என்றால் தக்காளி சட்டினி, உங்க குடும்ப பெண்கள் என்றால் மட்டும் ரத்தமான்னு மனதில் நினைத்துக்கொண்டே மேற்கொண்டு கேட்டேன். துவைக்கும் போது, முழங்கால் தெரிய மடித்துகட்டுவதையும், குனியும் போதும், நிமிரும் போதும் தவறாக பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தன்னுடைய குடும்ப பெண்கள் என்றால் மட்டும் தவறு என நினைப்பவர்கள், மற்ற பெண்களையும் அப்படியே பார்த்திருந்தால், நைட்டி ஆபாசமான உடையாகவே மாறியிருக்காதே. என்ன நான் சொல்வது? 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts