notification 20
Spellbound
அக்கா அக்காவென கூறிக்கொண்டு, அட்லீ தம்பி பார்த்த வேலைய பார்த்தீங்களா? விக்னேஷ் சிவனுக்கு அடுத்த தலைவ லியை இழுத்துவிட்ட அட்லீ! இவரு சும்மாவே இருக்கமாட்டார் போலவே!

பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கும் அட்லீ, தனது அக்காவான நயன்தாராவையும் எப்படியாவது பாலிவுட் பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கியுள்ளார். அப்படித்தான் பாலிவுட் பக்கம் உள்ள முக்கிய முன்னணி பட ஏஜென்சி நிறுவனங்களிடம் நயன்தாராவை பற்றி கூறியுள்ளார் போன்று! அதோடு மட்டுமல்லாது, குறிப்பிட்ட முன்னணி நிறுவனங்கள் நயன்தாராவை பார்க்கவும் வழிவகை செய்துள்ளார். நயன்தாராவை சந்தித்த பெரிய நிறுவனங்கள் படத்தை பற்றி பேசவே, படம் பற்றிய அடுத்தடுத்த தகவலை விக்னேஷ் சிவனிடம் டிஸ்கஸ் செய்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார். 

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் கால் பதித்த முன்னணி நடிகைகளின் லிஸ்டில் விரைவில், நயன்தாரா வந்துவிடுவார் போல் தெரிகிறது. ஏனெனில் நயன்தாராவை அணுகிய நிறுவனங்கள் எல்லாமே முக்கிய நிறுவனங்கள். வருடத்திற்கு ஒரு படம் என வைத்துக்கொண்டால் கூட பன்னிரண்டு நிறுவனங்களுக்கு பன்னிரண்டு படம் மொத்தம் பன்னிரண்டு வருடமாகுமே? இடையே தமிழ் படங்கள் வேறு லிஸ்டில் இருக்கும். 

இந்த அட்லீ நயன்தாராவுக்கு நல்லது செய்கிறாரா? இல்லை கெட்டதா? நயன்தாரா விரைவில் திருமணமாகி குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய வேண்டாமா? இப்படி நடித்து கொண்டே இருந்தால், எப்போது தான் தன்னுடைய சொந்த வாழக்கையில் கவனம் செலுத்துவார்?

நல்லவேலை நயன்தாரா குறிப்பிட்ட பட ஏஜென்சி நிறுவனங்களிடம், விக்னேஷ் சிவனை அணுகுமாறு கூறியுள்ளார். அக்கா பாலிவுட்டில் கொடி கட்டி பறக்க வேண்டும் என அட்லீ தம்பி செய்த வேலைக்கு விக்னேஷ் சிவனின் ரியேக்ஷ்ன் என்னவாக இருக்கும்? பாவம் அந்த மனுஷன் தானே நயனுக்காக காத்துக்கிடக்கிறார்? 

Share This Story

Written by

Akila View All Posts