notification 20
Spellbound
பாலிவுட் பக்கமே போகமாட்டேன் என்ற கொள்கையில் இருந்த நயன்தாராவுக்கு இப்போ ஆச்சு?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் மற்ற நாயகிகள் செய்யாத பல சாதனைகளை நயன்தாரா செய்துள்ளார். தனிப்பட்ட முறையில் லேடி சூப்பர்ஸ்டாராக பல படங்களில் சோலோ ரோலில் நடித்து கடந்த 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார்.

நயன்தாரா சினிமாவுக்கு வந்த புதிதில் ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. இல்ல, எனக்கு தென்னிந்திய மொழி படங்களில் நடிச்சா போதும், பாலிவுட் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். அட்லீயின் அன்புக்கு ஓகே சொல்லி தற்போது பல வருடங்களுக்கு பிறகு ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா சாருக் கான் படத்தில் நயன்தாராவின் புகைப்படங்கள் பாலிவுட்டில் வெளியாகி பாலிவுட் பிரபலங்களை கவர்ந்துள்ளது. சல்மான் கான் தனது அடுத்த படத்தில் நயன்தாரா தான் நடிகையாக நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளார். 40 வயசு நடிகைக்கு இப்படி போட்டி போட்டுக்கிட்டு சான்ஸ் குடுக்குறாங்களே என்று பாலிவுட் இளம் நடிகைகள் மிரண்டு போயுள்ளனர்.

Share This Story

Written by

Karthick View All Posts