notification 20
HotPicks
ஐஸ்லாந்து நாட்டில் கொசுக்களே கிடையாதாம், அங்கு மட்டும் எப்படி இது சாத்தியம்? வியக்க வைக்கும் சூழல்!

ஐஸ்லாந்து நாட்டில் கொசுக்களே கிடையாதாம், ஆனால் இங்கு தான் கொசுக்கள் பண்ணையே உள்ளது. அது அப்படி அங்கு மட்டும் கொசுக்கள் இல்லை? அங்குள்ள அரசு கொசு விரட்ட ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களோ? என சிந்தித்து கொண்டே இது குறித்து தேட ஆரம்பித்தேன். துருவ நாடுகளில் அதாவது பனி பிரதேசத்தில், கொசு பனிக்கு அடியில் முட்டை இடுகிறது. பனி உருகியவுடன் கொசு ஒரு பறவையாக வெளியேறுகிறது. வசந்த காலத்தின் தொடக்கத்தில் இந்த வேலை நடக்கும். 

ஆனால் ஐஸ்லாந்து நாட்டை பொறுத்தவரையில் இது அப்படியே மாறுபடும். ஏனெனில் அங்கு குளிர்காலத்தின் நடுவில் திடீரென வெப்பநிலை உயரும். பின்னர் மீண்டும் குறையும். இதனால் கொசு போன்ற சின்ன சின்ன உயிரினங்கள் குஞ்சு பொரிக்க தகுந்த சூழல் அங்கு இல்லாமலே இருந்து விடுகிறது.

கொசுவானது ர த்தத்தை உறிஞ்ச முதலில் இரையை கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் துணையை சந்திக்கவும் இ னப்பெருக்கம் செய்யவும் சதுப்பு நிலத்தில் முட்டையிடவும் பல நாட்கள் தேவைப்படும். இந்த நாட்களில் கொசு வளர உகந்த சூழல் அவசியம். ஆனால் ஐஸ்லாந்திலோ பருவம் அதன் இஷ்டத்திற்கு இருக்கும்போது மனிதனே சிரமப்பட்டு தான் வாழ்கிறான் எனும்போது கொசுவல்லாம் எந்த மூலைக்கு!

ஐஸ்லாந்தில் காலநிலை மாற்றங்கள் மிகவும் விரைவானவை. கொசு தன்னுடைய வாழ்க்கை சுழற்சியை முடிக்க போதுமான நேரம் அங்கு இல்லை. வெப்பநிலை குறைந்து குளங்களில் பனி உருவாகும்போது கொசு முட்டைகள் முதிர்ச்சியடையாது. இதனால் தான்  கொசுவே இல்லாத நாடாக ஐஸ்லாந்து உள்ளது. 

Share This Story

Written by

Akila View All Posts