Hugs & Kisses

பெண்களிடம் ஆண்கள் மறைக்க வேண்டிய ஆறு விஷயம்! சரக்கு அடிச்சிருந்தா கூட உளறிடாதீங்க! இது தெரியாம பேசி, பெண்களிடம் அசிங்கப்பட வேண்டாம்! இது பற்றி பேசினாலே, பெண் உக்கிரமாகிவிடுவார்!

Mar 04 2022 07:16:00 PM

பெண்களிடம் பேச கூடாத  சில விஷயங்கள் உண்டு. அவற்றை பற்றி எல்லாம் பேசினால் பெண்கள் உங்களிடம் காதல் என்ன? நட்பு கூட வைத்து கொள்ளமாட்டார்கள். முதலில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். எதிர்காலத்தில் அந்த பெண்ணின் குணங்கள் உங்களுக்கு பிடித்து போய் காதல் மலர  கூட வாய்ப்புண்டு. இல்லையெனில் நீங்க நட்பாக பழகி கொண்டிருக்கலாம், ஆனால் அந்த பெண் உங்களிடம் காதல் ஆசை கொண்டு அதை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். அப்படி உள்ள பெண்ணிடம் சென்று இன்னொரு பெண்ணை பற்றி 'அந்த பெண் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாரேன்?' என்று சொல்லாதீர்கள். காதலி, மனைவி என யாரிடமும் மற்றொரு பெண்ணின் அழகை பற்றி வாயை திறக்காதீர்கள். சொந்த வாயால் சூனியம் வைத்துக்கொள்வது போல தான் அதுவும்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்காட்டுவார்கள்.  ஆண்கள் திருமணம் ஆன பின்னர் கூட இதர பெண்களை பார்ப்பார்கள். ஆனால் பெண்கள் கணவர் என்ற ஒருவர் வந்த உடனே, குதிரைக்கு போட்ட கடிவாளம் போல கண்களை கணவர் மீது மட்டுமே வைத்திருப்பார்களே தவிர வேறு எங்கேயும் நகர்த்தமாட்டார்கள். ஏனெனில் பெண்களின் காதல் எப்போதுமே அப்படித்தான் கொஞ்சம் முரட்டு தனமாக தான் இருக்கும், ஆனால் சா கும்வரை ஏற்றம் இறக்கம் இல்லாமல் ஒரே மாதிரியாக உண்மையாக இருக்கும். 

men-love romantic couple-love
அடுத்து காதலி, மனைவி, தோழி, தங்கை, அம்மா  யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்கள் செய்யும் தவறை அவர்கள் முகத்திற்கு நேராக சொல்லிக்காட்டாதீர்கள். இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால் இதுவும் நல்லா தான் உள்ளது என சொல்லி பழகுங்கள். சமையலுக்கு மட்டுமல்ல எல்லா விஷயங்களுக்கும் இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் பிறந்தவீட்டில் காபி கூட போட தெரியாத  பொண்ணு, புகுந்த வீட்டில் கணவருக்காக பார்த்து பார்த்து சமைப்பார். அதனை கணவர் கண்டிப்பாக குறை சொல்ல கூடாது. ஏனெனில் குறை சொல்லவே ஒரு கூட்டம் அங்கு இருக்கும். அதிலிருந்து மனைவியை காப்பாற்ற வேண்டியதே கணவராக தான் இருப்பார். அந்த நிலையில் கணவரும் குறை சொல்லி கொண்டு இருந்தால்? அங்குள்ளவர்களுக்கு அது பெரும் அட்வான்டேஜாக மாறாதா? 

men-love romantic couple-love
மனைவியாக இருந்தால் அவர்களது பிறந்த வீட்டை பற்றி மட்டும் தவறாக பேசிவிடாதீர்கள். ஏனெனில் பத்துவருடத்திற்கு முன்னர் நீங்க யாரை எப்போது பேசினீங்க? எந்த நேரத்தில் பேசினீங்க? என்பதை கூட நினைவில் வைத்துக்கொள்ளும் சக்தி பெண்களுக்கு மட்டும் தான் உண்டு. காதலியாக இருந்தால் இப்போதே அவளது பிறந்த வீட்டை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். 

men-love romantic couple-love
குண்டா உள்ள பெண்கள் உங்களது தோழி அல்லது மனைவியாக இருந்தால், உ டல் எடையை பற்றி மட்டும் மூச்சு விட்டுவிடாதீர்கள். கொஞ்சம் புசு புசுவென இருக்க எனக்கு இது தான் புடிச்சுருக்குனு வழிஞ்சுருங்க!  அடுத்து பெண்களை பாராட்டி, அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் மதிப்பு கொடுத்து கொண்டாடுங்கள். குழந்தையும் பார்த்துக்கொண்டு, ஆன்லைனில் ஆபிஸ் வேலையும் பார்த்து கொண்டு, சமைக்கவும் செய்து கொண்டு, அப்பப்பா! அவர்களுக்கு மட்டும் என்ன ஒரு நாளுக்கு 48 மணிநேரம் உள்ளதா? ஆனால் இன்றும் ஆண்கள் தாங்கள் வேலைக்கு சென்று வருவதை மட்டுமே மிகைப்படுத்தி பேசி கொண்டிருப்பார்கள். உதவி செய்யுமாறு கேட்டால் கூட, 'அங்கு எனக்கு எவ்வளவு ஸ்ட்ரெஸ் தெரியுமா? எப்படி வேலை செய்யற தெரியுமா?' என மிகைப்படுத்துவார்கள். பெண்ணும் வேலைக்கு செல்கிறார்தானே? அவருக்கும் வேலைப்பளு இருக்காதா? கணவரிடம் உதவி கேட்கும் நேரம், நாமே அந்த வேலையை செய்துவிடலாம் என அடுத்து வேலையை பார்க்க போகும் பெண்களை கணவன்மார்கள் மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. குறை மட்டும் சொல்ல வேண்டாமே? உங்களால் முடிந்தால் வெங்காயம் நறுக்கி கொடுங்கள். அப்படி உள்ள கணவன்மார்கள் கிடைத்தாலே பெண்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள்.