நடிப்பின் கடவுள் என்றால் அது நம்ம சிவாஜிகணேசன் அய்யா தான். இதனால் தான் இவரை தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என்று எல்லோரும் அன்பாக அழைத்தார்கள். 1962ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் அமெரிக்கா நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது நிறைய ஹாலிவுட் நடிகர்கள் சிவாஜிகணேசனை சந்தித்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அந்த நேரத்தில் ஹாலிவுட் படங்களின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்த மார்லன் பிராண்டோ சிவாஜிகணேசனிடம் உங்களால் நேரத்தில் ஒரே அழுது கொண்டே சிரிக்க முடியுமா? சிரித்துக்கொண்டே அழமுடியுமா? என்று கேட்டார். மார்லன் பிராண்டோ கேட்டதை போலவே சிவாஜிகணேசன் அவரிடம் நடித்து காண்பித்தார். இதை பார்த்த மார்லன் பிராண்டோ உங்களால் என்னைப்போல் சுலபமாக நடிக்க முடியும். ஆனால் ஒருபோதும் என்னால் உங்களைப்போல நடிக்க முடியாது என்று சொன்னார்.
சிவாஜிகணேசனை கவுரவிக்கும் விதமாக ஒரு நாள் நயாகரா மாநகரின் நகர தந்தையாக சிவாஜிகணேசன் அறிவிக்கப்பட்டார். இதே கூற்றை 1968 ஆம் ஆண்டு உயர்ந்த மனிதன் படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்ட தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவும் சொல்லி இருக்கிறார். சிவாஜியால் மார்லன் பிராண்டோ மாதிரி நடிக்க முடியும். ஆனால் மார்லன் பிரண்டோவால் எப்போதும் சிவாஜியை போல நடிக்க முடியாது என்று.