notification 20
Daily News
காலியான எரிபொருள்! வேலையை நிறுத்திய செயற்கைகோள்! எதிர்பார்த்ததை விட அதிக உழைப்பை வெளிப்படுத்திய மங்கல்யான்!

இந்தியாவின் மிகவும் பெரிய அரசு துறை விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2013-ம், வருடம் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பிய செயற்கைகோள் தான் மங்கல்யான். இந்த செயற்கைக்கோளை தயாரிக்க மற்றும் வெற்றிகரமாக  விண்ணில் செலுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ள சுமார் 450 கோடிக்கும் மேல் செலவுகளை ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த செயற்கைக்கோளை PSLV-25 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ, தனது முதல் முயற்சியிலேயே (செப்.24, 2014) இந்த செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இணைத்து. 

ISRO mangalyan space research

இது இந்திய வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. காரணம் உலக நாடுகளில் அமெரிக்க, ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா மட்டும் தான் இவ்வாறன மிகப்பெரிய விண்வெளி சாதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கும் முதல் முயற்சியில் வெற்றி கிடைத்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. 

ISRO mangalyan space research

ஆரம்பத்தில் அனைவரின் கணக்குப்படி மங்கல்யான் செயற்கைகோள் வெறும் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆண்டுகள் பல கடந்தும் தனது வெற்றி பயணத்தை மங்கல்யான் மேற்கொண்டது. இது உலக நாடுகளின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பிய மிக முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 

ISRO mangalyan space research

இவ்வாறு இந்திய விண்வெளித்துறைக்கு நல்ல நண்பனாக செயல்பட்டு செவ்வாய்கிரக ஆய்வுகளை அயராது மேற்கொண்ட மங்கல்யான் விண்கலத்தின் எரிபொருள் தேர்ந்த நிலையில் அதன் பேட்டரி மெல்ல குறைய தொடங்கி இருக்கிறதாம். இதனால் செவ்வாய்கிரக ஆராச்சியை மங்கல்யான் விண்கலம் முடித்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. என்றாலும் இஸ்ரோ இதுகுறித்த அதிகார தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. எது எப்படியோ, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை அதிகரித்த மங்கல்யான் செயற்கைக்கோளை ஒரு சல்யூட்.

Share This Story

Written by

Logeshwaran J View All Posts