லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில், சூர்யா போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எப்போடா தலைவனை திரையில் பாப்போம் என்று ரசிகர்கள் விக்ரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்கள்.
மாஸ்டர் படத்துக்கும், விக்ரம் படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக அண்மையில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விஜய் சார் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகர். அவரை வச்சு படம் எடுக்கும்போது நம்ம எல்லாப் பக்கத்துல இருந்தும் யோசிக்கணும், சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம்னு படம் எடுக்க முடியாது.
அதனால தான் மாஸ்டர் படத்தை பாதி விஜய் சார் படமாகவும், பாதி என்னுடைய படமாகவும் 50-50 காம்பினேஷனில் எடுத்தேன். ஆனால் விக்ரம் படம் அப்படி கெடையாது. இது முழுக்க முழுக்க 100 சதவீதம் என்னோட படமாத்தான் இருக்கும். அதுக்கு நான் கியாரண்டி என்று பேட்டி கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.