கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முஸ்லிம் கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு சமஸ்கிருதம், வேத மந்திரங்களை சொல்லிக்கொடுக்கிறது. வகுப்பில் மாணவர் மற்றும் பேராசிரியருக்கு இடையேயான அனைத்து உரையாடல்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன. சமஸ்கிருதம், உபநிடதங்கள், புராணங்கள் போன்றவற்றைக் கற்பிப்பதன் நோக்கம் மாணவர்களின் அறிவையும் பிற மதங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாகும் என கல்வி நிறுவன முதல்வர் கூறினார்.
Sharia and Advanced Studies என்ற கல்வி நிறுவனத்தின் முடிவை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். மாணவர்கள் மற்ற மதங்கள் மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உணர்ந்தேன். சமஸ்கிருதம், உபநிடதங்கள், சாஸ்திரங்கள், வேதங்களை 8 வருடத்தில் படிக்க முடியாது.
இருந்தாலும், அவை பற்றிய அடிப்படையை இஸ்லாமிய மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கல்வி முறையை கொண்டு வந்தோம் என நிறுவன தலைவர் கூறினார். ஆரம்பத்தில் அரபு மொழியைப் போலவே சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படிப்பதன் மூலமும் பயிற்சி செய்வதன் மூலமும் காலப்போக்கில் அது எளிதாகிறது என்று மாணவர்கள் கூறினர்.